(துர்க்கா) தம்பின்,
சுமார் வெ. 80 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்காக 2 ஆண்டாக மாணவர்கள் காத்தி ருக்கும் ரீஜண்ட் தோட்ட புதிய தமிழ்ப்பள்ளியை பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதத்தை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுக்க ம.இ.கா.வால் முடியவில்லையா என்று பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர். இப்பள்ளிக்கூட விவகாரம் தொடர்பாக சனிக்கிழமை தம்பின், கெமஞ்சேவில் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. ரீஜண்ட் தோட்ட புதியத் தமிழ்ப்பள்ளி குறித்து இதில் பேசப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்டு, இன்னும் திறக்கப்படாமல் இழுபறி நிலையில் உள்ள இப்பள்ளிக்கூடம் குறித்து ம.இ.கா. தம்பின் தொகுதித் தலைவர் டத்தோ ராஜேந்திரன் வெறுமனே அறிக்கை விடுவதை விடுத்து, பள்ளியை திறப்பதற்கான காரியத்தில் இறங்க வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஆர்.தேவேந்திரம் (55) வலியுறுத்தினார். கறையான்களால் அரிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்த ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு பதில் புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்தது ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வீரப்பனும் மாணவர்க ளின் பெற்றோர்களும் என்பது டத்தோ ராஜேந்திரனுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் என்று பெற்றோர் சார்பாக எம்.மோகன் பேசுகையில் கூறினார்.
Read More: Malaysia Nanban News Paper on 8.1.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்