(எஸ்.எஸ்.பரதன்) சிலிம் ரிவர்,
இங்குள்ள கம்போங் பாரு ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் சுமார் வெ. 18 லட்சம் செல வில் கட்டப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் நாளை இவ்வட்டாரப் பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். ஆலய மண்டபம் கட்டி முடிக்க ப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அதிகாரப் பூர்வமாக திறப்புவிழா காணாமல் இருப்பதற்குக் காரணம் என்னவென அவர்கள் அறிய விரும்புகின்றனர்.
ம.இ.கா தஞ்சோங் மாலிம் தொகுதி தலைவர் டத்தோ கே.ஆர்.ஏ. நாயுடுவின் ஆலோசனையில், தொகுதியின் துணைத் தலைவர் டத்தோ பெட்ரோஸ் இம்மண்டபம் கட்டுவதற்கான குத்தகையைப் பெற்றிருந்தார். இம்மண்டபம் கட்டுவதற்கு மத்திய அரசாங்கம், மாநில அரசு, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் மூலம் மானியங்களும் நன்கொடைகளும் வசூலிக்கப் பட்டதாக தெரிய வந்துள்ளது.
இருப்பினும் இன்னும் வெ. 4 லட்சத்திற்கு மேல் கடன் இருப்பதாக குத்தகையாளர் பெட்ரோஸ் ஒரு சந்திப்பு நிகழ்வின் போது கூறியிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட இம்மண்டபத்திற்கு தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றம் தகுதி சான்றிதழ் வழங்கியுள்ளதா என்பதை குத்தகை யாளர் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்கள் அறிய விரும்புகின்றனர்.
Read More: Malaysia Nanban News Paper on 8.1.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்