காஜாங்,
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜூன் மாதம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று அவரின் துணைவியாரும் பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் நேற்று கூறினார்.காஜாங்கில் பக்காத்தான் ஹராப்பான் மகளிர் பேரவையின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர் இதை அறிவித்தார்.அன்வார் சிறைக்குச் சென்று நேற்று சனிக்கிழமையோடு 1,062 நாட் களாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் உடலளவில் இங்கு இல்லாதபோதிலும் அவருடைய ஆன்மா நமது போராட்டத்திற்கு துணையாக இருந்து வருகிறது என்று அவர் கூறினார். 2008 ஜூன் 26ஆம் தேதி புக்கிட் டாமன்சாராவில் உள்ள டேசா டாமன்சாரா ஆடம்பர அடுக்கு மாடி வீட்டில் முகமட் சைபுல் புகாரி அஸ்லான் (வயது 32) என்பவருடன் ஓரின உறவில் ஈடுபட்டதற்காக அன்வார் ஐந்தாண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் வான் அஜிசா, பக்காத்தான் ஹராப்பான் தனது பிரதமர் வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினார்.
Read More: Malaysia Nanban News Paper on 7.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்