(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங்மாலிம்,
நமது நாட்டில் நிகழ்ந்த நட்சத்திர விழாவுக்கு தமிழகத்திலிருந்து வருகை புரிந்த நடிகர் ரஜினிகாந்த், அவரின் மனைவி லதாவுக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்பு நல்கப்பட்டது ஒரு இழிவான செயலாக கருதப்படுவதாக கோலகுபுபாருவைச் சேர்ந்த மகேந்திரன் சுப்பையா தெரிவித்தார்.தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் நடிகர்களுக்கான ஒரு மண்டபம் கட்டுவதற்காக மலேசிய தமிழர்களிடம் பணம் வசூலிக்க வந்திருக்கும் நடிகர்களுக்கு இத்தகைய வரவேற்பினை வழங்குவது முறைதானா என குணசேகரன் பெருமாள் வினவினார்.
மலேசிய வாழ் தமிழர்களின் நல்வாழ்வுக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த நடிகர்கள் தீர்வு கண்டுள்ளார்கள் எனும் தோற்றத்தில் அவர்களுக்கு அத்தகைய மரியாதை வழங்கப்பட்டதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். தமிழ்ச் சம்பிரதாயங்களையும் பண்புகளையும் மறந்து அரசியல் தலைவர் ஒருவர் பெண்களுக்கு மாலைகள் அணிவித்து வரவேற்றது பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது என சுங்கையைச் சேர்ந்த பா.சங்கர் கூறினார். மலேசியத் தமிழர்களிடம் மற்ற நாட்டு தமிழர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என தமிழறிஞர்கள் பலர் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டது வேதனையளிப்பதாக வாடகைக் கார் ஓட்டுநர் ச.சோமு கூறினார்.
Read More: Malaysia Nanban News Paper on 7.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்