ஐ.பி.எப் கட்சியும் எம். சம்பந்தனும் மறைமுகமாக எதிர்க்கட் சிக்கு வேலைபார்க்கின்றனராஎன்று ஐ.பி.எப். உத்தாமா கட்சியின் தலைவர் மு.வீ.மதியழகன் கேள்வி எழுப்பியுள் ளார். ஐ.பி.எப். சம்பந்தனுக்கு தன்னையே மறக்கும் ஞாபக மறதி நோய் என்று நினைக்கிறேன். ஆகவே அவருக்கு சில உண்மைகளை நினைவுப்படுத்த விரும்புகிறோம் என்று மு.வீ. மதியழகன் தெரிவித்துள்ளார். தலைவர் என்பவர் ஆக்கப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் சிந்தித்து செயல்பட வேண்டும். அதைவிடுத்து பட்டத் திற்கும், பணத்திற்கும், பதவிக் காகவும் சமுதாயத்தின் ஒற்றுமை ஒருமைப் பாட்டை உடைத் தெறியக்கூடாது. மஇகாவை ஐ.பி.எப். நெருங்குவதற்கே இன்னும் நமக்கு அரைநூற்றாண்டுகள் வேண்டும். இதில் சம்பந்தன் ஐ.பி.எப். மஇகாவில் இணைவதைவிட சாவதே மேலென விதண்டாவாதம் பேசிட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன் என்று மதியழகன் தெரிவித்தார். இதுபோலவே இப்படியானதையே மூலதனமாகக் கொண்டு போராடிய நமது முதல் ஐ.பி.எப். கட்சியின் தேசியத் தலைவர் புரட்சித் தலைவர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனே தனது கடைசி காலத்தில் மஇகாவிடமே சரணடைய வேண்டிய கட்டாயத்தை அறியாதவர்கள் அல்ல. ஐபிஎப் கட்சியும், அதன் முறையற்ற இன்றைய தலைவரான எம். சம்பந்தனும், அவரின் முரட்டுத் தனத்தின் பின்னணியில் மர்மமான உள்நோக்கம் உள்ளது. அதில் ஐபிஎப் கட்சியும் அதன் வாக்காளர்களும் மஇகாவை ஆதரிக்க மாட்டோம் என்பதன் பிரதிபலிப்பும், பின்விளைவும் அவர்கள் தேசிய முன்னணியை எதிர்ப்பதற்கு ஈடானது. ஐ.பி.எப். கட்சி மஇகாவின் வேட்பாளர்களை ஆதரிக்காமல் போகுமாயின் பிரதமரை தோற்கடித்திட திட்டமிடும் செயலாகும் என்பதனை ஐ.பி.எப். மறுக்குமா? மஇகாவின் நிழலைக்கூட தொட்டுப்பார்க்க முடியாத சம்பந்தனின் ஐ.பி.எப். கட்சி தெரிந்திருக்க வேண்டியது, தேசிய முன்னணியில் இணைவதற்கே மஇகா தனது கண்களை அசைத்திட வேண்டும். இந்த மரபுதான் நாம் கற்ற பாடமும். இதுவே நமது ஐ.பி.எப். கட்சியின் 25 வருட கால போராட்டமாகும். இதில் புரட்சித் தலைவர் எம்.ஜி.பண்டிதனே தோற்றுப் போனார் என்பதை எம்.சம்பந்தன் நினைத்துப் பார்த்திட வேண்டும். இவரது தலைமையிலே தான் ஐ.பி.எப். கட்சியே மூன்று துண்டுகளாய் உடைந்து, உழைத்தவர்கள் தெருவில் நிற்பதை அறியலையோ? கட்சிக்கு உயிர்கொடுத்து உழைத்தவர்களே ஒன்றுபடுத்திட வக்கற்ற சம்பந்தனா மஇகாவைப்பற்றி பேசுவது மிக வேதனையானது என்று முவீ.மதியழகன் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்