(சுகுணா முனியாண்டி) சுங்கை பக்காப்,
எங்களுக்கு புதிய வீடுகளை கட்டி தாருங்கள். இல்லையேல், எங்கள் குடியிருப்புப் பகுதியில் வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணுங்கள் என சுங்கை ஜாவி வட்டாரத்தில் உள்ள கம்போங் சேது மக்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். கடந்த இரண்டு தினங்களாக பெய்த தொடர் அடை மழையினால் மோசமாக பாதிக்கப்பட்ட கம்போங் சேது மக்கள், வெள்ளத்தில் தங்களின் உடைமைகளை இழந்து பரிதவிக்கின்றனர்.
அவர்களை காப்பாற்றும் பணிகளில் மலேசிய பாதுகாப்புப் படையினர் களமிறங்கினர். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது. ஒவ்வொரு முறையும் வெள்ளம் ஏறிய பின்னர் எங்களுக்கு அனுதாபங்கள் கூற இங்குள்ள சட்ட மன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநில ஆட்சி குழு உறுப்பினர்களும் வருகின்றனர். உதவிகள் செய்கின்றனர் . ஆனால், அது எங்களுக்கு நிரந்தர தீர்வாகுமா என்று பாதிக்கப் பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Read More: Malaysia Nanban News Paper on 6.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்