(ஆறுமுகம் பெருமாள் ) கிள்ளான்,
பத்து மாநிலங்களில் நேற்று தொடங்கிய புதிய கல்வி ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. 524 தமிழ்ப்பள்ளிகளில் 97 பள்ளிகளை கொண்டுள்ள சிலாங்கூர் மாநிலத்தில் 4,564 மாணவர்கள் முதல் வகுப்பில் காலடியெடுத்து வைத்து, புதிய வரலாறு படைத்துள்ளனர். அதிகமான மாணவர்கள் சேர்க்கப்பட்ட பள்ளியாக கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி தனது நிலையை தற்காத்துக்கொண்டது.
அதிகமான மாணவர்களை கொண்டுள்ள தமிழ்ப்பள்ளியாக அது விளங்குகிறது. பேரா மாநிலத்தில் 134 தமிழ்ப்பள்ளிகளில் 1,942 மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். பகாங் மாநிலத்தில் 492 மாணவர்கள் முதல் வகுப்பில் காலெடுத்து வைத்துள்ளனர். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு முதலாம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால், உண்மையான எண்ணிக்கை கிடைக்கவில்லை. மலாக்கா மாநிலத்தில் 21 தமிழ்ப்பள்ளிகளில் 391 மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். மலாக்கா, குபு தமிழ்ப்பள்ளி யில் இம்முறை 60 மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர்ந்து, இப்பள்ளி முன்னணி பள்ளியாக திகழ்கிறது.
Read More: Malaysia Nanban News Paper on 3.2.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்