(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர்பாரு,
புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளி இன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அது திட்டமிட்டபடி திறக்கப்படாது என்ற தகவலை அறிந்து ஜ.செ.க. சந்திரன் தலைமையில் எதிர்க்கட்சியினர் நேற்று புதிய பள்ளி கட்டடத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புக்கிட் இண்டா தமிழ்ப் பள்ளி ஜனவரி முத லாம் தேதி திறக்கப்படும் என்று இதற்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும், அதன்படி பள்ளிக்கூடம் ஏன் திறக்கப்படப்போவதில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
பி.கே.ஆர். கட்சியின் ரோனி முருகன், அமானா கட்சியின் ஜீவன், ஹிண்ட்ராப்பின் மோகன் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு மத்தியில், இப்பள்ளி ஜனவரி முதல் தேதி திறக்கப்படும் என கூறப்பட்டது. அதன் காரணமாக இப்பள்ளி யில் பயில 150 மாணவர்கள் பதிந்து கொண்டுள்ளனர். ஆனால், அப்பள்ளி திறக்கப்படாததால் மாணவர்கள் வேறு பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட தாகவும் இது பெற்றோருக்கு பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜ.செ.க சந்திரன் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban News paper on 1.1.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்