கோலாலம்பூர்,
நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட் சியைக் கைப்பற்றுமேயானால், பக்காத்தான் ஹராப்பானின் ஆலோசனைபடி பிரதமராக துன் மகாதீரையும் துணைப்பிரதமராக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசாவையும் ஏற்றுக்கொள்ள பி.கே.ஆர். ஒப்புக்கொண்டுள்ளது.கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பி.கே.ஆர். நடைமுறை தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதற்கு முழு அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் வட்டாரங்கள் கூறின.
எனினும், இது பற்றி வெளியில் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான பி.கே.ஆர். தலைவர்கள் இவ்விஷயத்தில் மௌனம் சாதித்து வருகின்றனர்.துன் மகாதீர் - வான் அஜிசா தலைமைத்துவ பரிந்துரைக்கு அக்கூட்டத்தில் வரவேற்பு நல்கப்பட்டதாகவும் அவை குறிப்பிட்டன. இத்தலை மைத்துவ பரிந்துரை பற்றிய தகவல் கசிந்ததை தொடர்ந்து பி.கே.ஆர். தலைவர்களில் சிலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
Read More: Malaysia Nanban News Paper on 29.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்