லோகேஸ்வரி ஏழுமலை/தேசிய மாதிரி தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளி/மலாயாப் பல்கலைக் கழகம்/ தமிழ்ப் பிரிவு, மொழியியல் துறை (ஆண்டு 4)
2006ஆம் ஆண்டு ஜொகூர் தாமான் துன் அமினா தமிழ்ப் பள்ளியின் மாணவியான லோகேஸ்வரி ஏழுமலை ( வயது 23) தற்பொழுது மலேசியாவின் முதல்நிலை பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பிரிவு, மொழியியல் துறையில் தமது படிப்பைத் தொடர்கிறார்.கணிதத்திலும் அறிவியலிலும் தமிழ்க்க ல்வியிலேயே பயின்ற இவர், யூபிஎஸ்ஆர் தேர்வில் 7 ஏ பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கல்வி தனது வாழ்க்கைக்குப் பாலமாக அமைந்திருக்கும் இவ்வேளையில் தமிழ்ப் பள்ளியில் பயின்றதை பெருமை யாகக் கருதுகிறார் ஏ.லோகேஸ்வரி.
இவ்வாண்டு சுல்தான் இட்ரீஸ் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மொழியியல் மாநாட்டில் தனது விரிவுரையாளர் முனைவர் மலர்விழி உதவியுடன் ஒரு கட்டுரையும் படைத்திருக்கிறார்.
ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் வாழ்க்கை கல்விக்கும் வித்திட்டது தமிழ்க்கல்வியே. தொடர்ந்து இவர் முதுகலையும் முனைவர் படிப்பையும் முடித்து விரிவுரையாளராக வேண்டும் என்ற இலக்கையும் கொண்டுள்ளார் என்பது தமிழ்ப் பள்ளியில் பயின்றவராலும் சாதிக்க முடியும் என்பதனை தெளிவாக விளக்குகிறது. தமிழ்ப் பள்ளியிலும் சிறந்த கல்வியினைப் பெறலாம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து தம்பி தங்கைகளைத் தமிழ்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாகும்.
Read More: Malaysia Nanban News Paper on 28.12.2017
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்