(பி.ஏ.கந்தையா) தெலுக்இந்தான்,
எழுந்து நடமாட முடியாமல் கோமா நிலையில் கணவர், பள்ளியில் பயிலும் மூன்று பிள்ளைகள், ஒரு கைக்குழந்தை - இதுதான் எஸ்.லோகேஸ்வரி குடும்பத்தின் இன்றையச் சூழ்நிலை. இவரின் கணவர் பி.ஆப்ரஹாம் (32) கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கியதன் விளைவாக, சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் வீட்டில் படுத்த படுக்கையாக கிடக்கின்றார்.
இக்குடும்பத்தினர், இங்கு, ஜாலான் பசாரில் உள்ள சீனருக்கு சொந்தமான ஒரு வீட்டில் 300 வெள்ளி வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக வீட்டின் வாடகைப் பணத்தை செலுத்த முடியாமல் இம்மாதம் 31-ஆம் தேதியுடன் வீட்டைவிட்டு வெளியேறும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்ப ட்டுள்ளார். சதீஸ்வரி (11), அர்விந்த் (8), ஸ்ரேல் ( 3) என்ற மூன்று பிள்ளைகளுடன் கைக்குழந்தை யையும் வைத்துக்கொண்டு, படுத்த படுக்கையாக கிடக்கும் கணவரையும் அழைத்துக்கொண்டு நான் எங்கு செல்வது?
கண்களில் வஞ்சமில்லாமல் கொட்டும் கண்ணீருக்கிடையே லோகேஸ்வரி கேட்கும் கேள்வி இது. அடுத்து என்ன செய்வது என்பது அறியாது தவித்து வருகிறார் இந்தத் தாய்.
Read More: Malaysia Nanban News Paper on 28.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்