காஜாங்,
தன்னுடைய பராமரிப்பில் இருந்த 13 வயது சிறுமியைச் சித்ரவதை செய்ததாக நம்பப்படும் செமினியில் உள்ள சிகிச்சை மையத்தின் 41 வயதுமிக்க பராமரிப்பாளரைக் காவல்துறை கைது செய்தது.சித்ரவதை விவகாரம் குறித்து விளக்கம் கொடுக்க நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் காஜாங் காவல்துறை தலைமையகத் திற்கு வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அந்த மையத்திற்குச் சிகிச்சை பெற வந்த வாடிக்கையாளரிடம் அந்தச் சிறுமி தான் சித்ரவதை செய்யப்படுவதைக் குறித்துப் பகிர்ந்துள்ளார். இதனை அந்த வாடிக்கையாளர் அரசு சாரா இயக்கத்திடம் தெரிவித்ததை அடுத்து காவல்துறையிடம் இவ்விவகாரம் தொடர்பாகப் புகார் செய்யப்பட்டது.சம்பந்தப்பட்ட சிறுமியின் உடலில் தீக்காயங்கள் காணப்படுவதாகவும் தற்போது அவர் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டு வருவதாகவும் காஜாங் காவல்துறை தலைவர் உதவி கமிஷனர் அகமட் டிஜாஹிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 27.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்