பெண்கள் மத்தியில் அதிகரித்துவரும் புற்றுநோயை வரும் முன் காப்பது எப்படி என்பது மீதான மருத்துவ பரிசோதை மற்றும் அதன் விழிப்புணர்வு குறித்த நிகழ்வொன்று நேற்று காலை கேரித்தீவு மேற்குத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பொது மருத்துவமனையின் புற்றுநோய் தடுப்புப் பிரிவு, கேரித்தீவு டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் கிராமம், கேரித்தீவு குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.சுப்ரமணியம் நிர்வாகத் தினரின் ஆதரவில் புற்றுநோய் விழிப் புணர்வு சங்கத்தின் நிறுவனரும் அதன் தேசியத் தலைவருமான டாக்டர் முகமட் ஃபாருக் அப்துல்லாவின் ஏற்பாட்டில் நடை பெற்ற மருத்துவ பரிசோ தனை முகாமில் துணைப் பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அப்துல் ஃபாத்தா பின் ஹாஜி இஸ்கந்தார் கலந்து சிறப்புச் செய்தார். கேரித்தீவிலுள்ள தோட்ட மக்களுக் கான இம்மருத்துவ முகாமினை ஏற்பாடு செய்திருந்த டாக்டர் முகமட் ஃபாருக், மலேசியாவில் பெண்கள் மத்தியில் அதிகரித்துவரும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உட்பட அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாமினை தமது சங்கத்தின் மூலமாக மேற்கொண்டு வருவதாக கூறினார். கேரித்தீவில் அடுத்த மாதம் அக். 2, 9 ஆகிய மேலும் இரண்டு நாட்களுக்கு வெவ்வேறு பகுதிகளில் இதுபோன்று இரண்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். நடைபெற்ற நிகழ்வில் பெண்களுக் கான மார்பக புற்றுநோய் பரிசோதனை, புற்றுநோய் சோதனை, ஆண்களுக்கான மருத்துப் பரிசோதனை, இரத்த அழுத்தம், இனிப்புநீர் சோதனை குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி ஆகியவை நடைபெற்றது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்