img
img

இமயமென உயர்த்திய வாட்சன் தமிழ்ப்பள்ளி
புதன் 20 டிசம்பர் 2017 17:30:30

img

வேந்தன் ஜெயராமு /வாட்சன் சாலை தமிழ்ப்பள்ளி, போர்ட்கிள்ளான் /மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் / குடிமுறைப் பொறியியல் (ஆண்டு 2)

மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் என்றுமே அழியாத சுவட்டினைப் பதிந்து கொண்டிருக்கும் போர்ட் கிள்ளான் துறைமுகப் பகுதியில் அமைந்தி ருக்கும் பெர்சியாரான் ராஜா மூடா மூசா தமிழ்ப்பள்ளியில் (வாட்சன் தமிழ்ப்பள்ளி) முதலாம் ஆண்டினில் காலடி எடுத்து வைத்ததன் பலனாக இன்று இமயமென உயர்ந்திருப்பதாகக் கூறுகின்றார் மலேசிய புத்ரா பல்கலைக் கழகத்தின் (University Putra Malaysia - UPM) இரண்டாம் ஆண்டு குடிமுறைப் பொறியியல் (Civil Engineering) மாணவரான வேந்தன் ஜெயராமு.

ஜெயராமு - பரமேஸ்வரி தம்பதியரின் கனவினை நனவாக்கி இருக்கும் வேந்தன் ஜெயராமு குடும்ப சூழலில் ஆங்கில மொழி பயன்பாடு குறைவாக இருந்த போதிலும் ஆங்கில மொழியில் போதிக்கப்பட்ட கணிதத்தையும் அறிவியலையும் மிகச் சிறந்த முறையில் கற்றதனால் டத்தோ ஹம்சா (SMK Dato Hamzah, Klang) இடைநிலைப்பள்ளியில் ஐந்து ஆண்டு கல்வியில் மிகவும் சிறந்த முறையில் மேற்கொள்ள முடிந்ததாகக் கூறுகின்றார்.

எஸ்.பி.எம் தேர்விற்குப் பின்னர் பேரா மெட்ரிகுலாசி கல்லூரியில் (Kolej Matrikulasi Perak) ஓராண்டுக் கல்விக்குப் பின்னர்  அரசாங்கப் பல்கலைக்கழக வாய்ப்பினைப் பெற்றதாகப் பெருமையோடு கூறுகின்றார் வேந்தன் ஜெயராமு. தன்னுடைய கல்வி பயணத்தின் உச்சியை ஈட்டுவதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் நண்பர்களும் பக்க துணையாக இருந்ததாக்க் கூறும் இவர் தமிழ்ப்பள்ளிகளில் ஆங்கில மொழியின் பயன்பாடு மாணவர்களின் இடை நிலைப்பள்ளியில் கல்வி வெற்றிக்குப் பாலமாக அமைவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொண்டு வரும் சிவில் பொறியியல் துறையில் முதல் நிலையில் தேர்ச்சி பெறுவதையே இலக்காகக் கொண்டிருப்பதாகக் கூறும் வேந்தன் ஜெயராமு இதே துறையில் முனைவர் கல்வியைத் தொடரவும் முயற்சிகளை மேற்கொள்வதாகக் கூறியதோடு ஒவ்வொரு தமிழ்ப்பள்ளி மாணவருக்கும் கல்வியில் உயர்நிலையை எட்டிப் பிடிக்கும் வாய்ப்புகள் நிச்சயம் இருப்பதாக நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img