(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர்பாரு,
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கு தாமான் பெலாங்கியில் உள்ள எண்ணெய் நிலையத்தில் நடந்த கொலையில் இரு குண்டர் கும்பல்களுக்கு தொடர்பிருப்பதாக நம்பப்படுகின்றது.எண்ணெய் நிலையத்தில் கொலையுண்ட 44 வயதுதான் ஆய்க் சாய் போதைப் பொருள் உட்பட பல்வேறு குற்றங்க ளுக்காக பல முறை போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டவர் என நம்பப்படும் வேளையில் இரு குண்டர் கும்பல் களுக்கிடையே ஏற்பட்ட விரிசல் காரண மாகவே அந்த மரணச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என அறியப்படு கின்றது.
முன்னதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி குண்டர் கும்பல் பிரச்சினையால் அந்த சம்பவம் நடந்ததாக கூறியிருக்கிறார். அந்தக் கொலை தொடர்பான பல ஆதாரங்களை திரட்டியுள்ளதாக குறிப்பிட்ட தேசிய போலீஸ் படை துணைத்தலைவர் டான்ஸ்ரீ நூர் ரஷிட் இப்ராஹிம் அந்தக் கொலை குறித்து விசாரணை மேற்கொள்ள மாநில அளவில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban News Paper on 20.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்