கோலாலம்பூர்,
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என்று ஆரூடம் கூறப்பட்டுள்ளது. மார்ச் அல்லது ஏப்ரலில் நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. சிலாங்கூரில் தேர்தல் தொகுதி திருத்தங்கள் மீதான ஆட்சேபங்களை விசாரிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடையுத்தரவை தள்ளுபடி செய்யும் வழக்கில் தேர்தல் ஆணையம் (இ.சி.) வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவ்வாறு நடக்கலாம் சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி சீனமொழி நாளேடான சின் சியூ டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரியில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டமொன்று கூட்டப்பட்டு, அதில் புதிய தேர்தல் தொகுதி எல்லைகள் ஏற்கப்படும். புதிய தேர்தல் தொகுதி எல்லைகள் மீதான விசாரணை சிலாங்கூரில் மட்டும்தான் இன்னும் நடக்கவில்லை. சிலாங்கூர் மாநிலம் , தேர்தல் ஆணையத்தின் தேர்தல் தொகுதிகளை திருத்தி அமைத்ததை செல்லாது என்று அறிவிக்கக் கோரி கடந்த 2016 ஆம் வழக்கு தொடர்ந்தது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி சிலாங்கூர் அரசு தொடுத்திருந்த வழக்கு மனுவை தள்ளுபடி செய்தது.ஆனால்,தொகுதி சீரமைப்பு தொடர்பான தேர்தல் ஆணை யத்தின் விசாரணையை நிறுத்தி வைக்குமாறு அது உத்தரவிட்டது. இப்போது அந்தத் தடையும் அகன்று விட்டது.
Read More: Malaysia Nanban News Paper on 20.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்