(அ. நாகேஸ்வரராவ்) தைப்பிங்,
பேரா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமான தைப்பிங்கில் இந்தியர்களின் நில அடையாளங்கள் அதிகமாக இருந்த போதிலும் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு பகுதியும் இந்தியர்களை விட்டு கை நழுவி போவது, தைப்பிங் வாழ் மக்களை கவலையில் ஆழ்த்தி வருகிறது. இது மக்களின் கவனக்குறைவா? அல்லது இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிக் கொள்ளும் தலைவர்களின் அலட்சியப்போக்கா? என்று வினவ தோன்றுகிறது.
தைப்பிங்கில் தமிழர் சங்கம், இந்து சங்கம், ம.தி.க., தமிழர் முன்னேற்றக்கழகம், தமிழ் இளைஞர் மணிமன்றம், எழுத்தாளர் சங்கம் என அதிகமான அமைப்புகள் இருந்த போதிலும் இயக்கங்கள் சார்ந்த அல்லது கோவில் பரிபாலனம் சார்ந்த பல சொத்துக்கள், கண்ணுக்கு தெரியாமல் பிற இனத்தவர்க ளுக்கு கைநழுவி போவது, இங்குள்ள பெரியோர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.
தைப்பிங்கில் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் கீழ் முன்பு இருந்த தைப்பிங் இந்து இடுகாட்டு நிலம், பின்னர் தைப்பிங் தேவாலய சபா நிர்வா கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன் கீழ் தைப்பிங், துப்பாயில் சுமார் 9 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்து இடு காட்டுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதாகும். இது அரசு பதிவேட்டிலும் இடம் பெற்று இருந்தது.
Read More: Malaysia Nanban News Paper on 20.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்