(ப.சந்திரசேகர்) ஈப்போ
திருடுபோன எனது கைப்பைக்குள் இருந்த அடையாள கார்டை பயன்படுத்தி அடகு ரசீதைக் கொண்டு அடகு கடையிலிருந்த என் தங்க நகையை மீட்டிருப்பது குறித்து இந்திய மாது பேரா மசீச புகார் பிரிவிடம் முறையிட்டார். கடந்த டிச. 2 ஆம் தேதி சிலிபின் தேவாலயத்தின் முன் காரை நிறுத்தி விட்டு சென்ற பிறகு திரும்ப காருக்கு வந்த போது காரின் கண்ணாடி உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சிக்குள்ளானதாக தேவமணி (வயது 38) கூறி னார். காரின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த கைப்பை கொள்ளையடிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அதே நாளில் போலீசில் புகார் செய்ததாக அவர் கூறினார். கைப்பைக்குள் இருந்த என் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ரொக்கம் இவற்றோடு அடகு கடை ரசீதும் கொள்ளையிடப்பட்டது. எனது பாரம்பரிய தங்க வளையல் அடகு ரசீது காணாமல் போனதாக இது குறித்து புகார் செய்ய சம்பந்தப்பட்ட அடகு கடைக்கு சென்ற போது அடகு வைத்த தங்கவளையல் மீட்கப்பட்டு விட்டதாக அடகு கடை நிர்வாகம் கூறிய போது அதிர்ச்சிக்குள்ளானேன்.
Read More: Malaysia Nanban News Paper on 19.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்