(ஆர். குணா) புத்ராஜெயா
தங்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் எனக் கோரி பாடாங் மேஹா தோட்ட முன்னாள் தொழிலாளர்கள் பிரதமர் இலாகாவின் முன் குந்தியிருப்பு போராட்டத்தில் இறங்கினர்.207 முன்னாள் பாட்டாளிகளுக்கு சேர வேண்டிய வேலை நீக்க இழப்பீட்டுத் தொகை, விரைந்து கிடைக்க பிரதமர் துறை அலுவலகம் உடனடியாக தலையிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் தொழிலாளர்கள் கேட்டு க்கொண்டனர்.
இஏசி தோட்ட நிறுவனத்தால் வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட 207 தோட்டப் பாட்டாளிகளுக்கு வேலை நீக்க இழப்பீட்டு தொகையான 6,529,184.96 வெள்ளியை அலமாண்டா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.இத்தொகையில் இருந்து மக்களுக்கு உரிய இழப்பீடுகள் கிடைக்கும் என மக்கள் பல ஆண்டுகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியதால் அலமாண்டா நிறுவனத்திற்கு எதிராக மக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கில் அலமாண்டா நிறுவனம் தோல்வி கண்டது.
Read More: Malaysia Nanban News Paper on 19.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்