(துர்க்கா) சிரம்பான்,
நெகிரி செம்பிலானின் தலைநகர் சிரம்பான், அடுத்த ஆண்டில் மாநகர் அந்தஸ்து வழங்கப்படு வதை வட்டார மக்கள் வரவேற் றுள்ளனர். ஆனால், அந்த அந் தஸ்து கிடைப்பதற்கு முன்னதாக சிரம்பான் நகரில் மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்று சிரம்பான் நகர மக்கள் நெகிரி மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மக்கள் எதிர்நோக்கி வரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல், மாநகர் அந்தஸ்து வழங்கப்படுவதில் எந்த அர்த்தமுமில்லை என்று அவர்கள் வலியுறுத்து கின்றனர். சிரம்பானுக்கு மாநகர் அந்தஸ்து வழங்கப்படுவதற்கு மத்திய அரசாங்கம் கடந்த 2012 ஆம் ஆண்டு அங்கீகாரம் வழங்கியது. எனினும் அதன் தரம் உயர்த்தப்படுவதற்கான அடிப்படை வேலைகளுக்காக ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் அடுத்த ஆண்டு முற்பகுதியில் சிரம்பான் மாநகர் மன்றமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கடந்த வாரம் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் அறிவித்துள்ளார். தற்போது நகராண்மைக்கழகமாக விளங்கி வரும் சிரம்பான் மற்றும் நீலாய் ஆகியவற்றை ஒருங்கி ணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
Read More: Malaysia Nanban News Paper on 19.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்