(ஆர்.குணா) உலு சிலாங்கூர்,
உலு சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங் தோட் டம், 1991-ஆம் ஆண்டில் பண்டார் புக்கிட் பெருந்தோங் மேம்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதன் தொழிலாளர்களுக்கு மாற்று வீடுகள் வழங்க வாக்குறுதி அளிக்கப் பட்டது. ஆனால், இன்று 26 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அத்தோ ட்டத்தின் 54 தொழிலாளர்கள் கேட்கும் கேள்விகள்: 1) எங்கள் வீடுகள் எங்கே 2) எங்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்ன வானது என்பதுதான். நேற்று அவர்கள் இங்கு மறியலில் ஈடுபட்டனர்.
புக்கிட் பெருந்தோங் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை இன்றும் இழுப்பறியாக இருப்பதைக் கண்டு 54 தொழிலாளர்கள் கொந்த ளித்துள்ளனர். நேற்று தோட்ட நிறுவனத்தின் அலட்சியமான போக்கை எதிர்த்து பிஸ்ஆர்எம் சிவராஜன் தலைமையில் தொழிலாளர்கள் மறியல் நடத்தினர்.
தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று தோட்ட நிறுவனம் தந்த வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது. வீட்டுடமை திட்டத்தை மேற்கொள்ள விருந்த துணை நிறுவனம் ஒன்று திவாலாகி விட்டது என்ற கட்டுக் கதையினை கட்டவிழ்த்துவிட்டதில் உண்மையில்லை. உண்மையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் செழிப்பாகவும் செலுமையாகவும் இருக்கிறது. கைவிடப்பட்டுள்ள வீடமைப்பு திட்ட பகுதியினை தொழிலாளர்கள் பார்வையிட்டனர். அங்கே மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. தோட்டத்தின் குடியிருப்பு பகுதியில் அத்துமீறி செம்பனை கன்றுகள் நட்டு வைக்கப்பட்டிருந்தது.
Read More: MALAYSIA NANBAN NEWS PAPER on 18.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்