பெயர்: தருஷணா த/பெ சந்திரசேகரன்
தமிழ்ப்பள்ளி: சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
பல்கலைக்கழகம்: மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
துறை: கச்சா எண்ணெய் பொறியியல்
தமிழ்ப்பள்ளிகளில் மட்டும்தான் நம்முடைய பாரம்பரியத்தையும், நற்பண்புகளையும் உருவேற்ற முடியும் என்பதை திடமாகக் கூறுகின்றார் நெகிரி செம்பிலான், சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முதலாம் ஆண்டில் காலடி வைத்து பல்கலைக்கழகத்தின் வாயிலை எட்டிப் பிடித்திருக்கும் தரு ஷணா சந்திரசேகரன்.
ஆறாண்டுக் கல்வியை சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முடித்த பின்னர் ரந்தாவ் இடைநிலைப்பள்ளியில் படிவம் 5 வரை கல்வியை முடித்து மிகச் சிறந்த தேர்ச்சியினைப் பெற்று மலாக்கா மெட்ரிகுலேஷன் (Kolej Matrikulasi Melaka) கல்லூரியில் ஓராண்டுக் கல்வியை முடித்த பின்னர் ஜொகூர் மாநிலத்தில் அமைந்திருக்கும் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Universiti Teknologi Malaysia) பெட்ரோலிய பொறியியல் (Petroleum Engineering) துறையில் முதலாமாண்டு மாணவியாகும் வாய்ப்பினைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே தமிழ்ப்பள்ளிகள் விளங்குவதாகக் கூறும் தருஷணா சந்திரசேகரன், சந்திரசேகரன் ஞானசுந்தரி தம்பதி யரின் ஒரே பிள்ளையாவார். தன்னுடைய கல்வி இலக்கினை தொடக்கி வைத்த பெருமை தமிழ்ப்பள்ளியையே சாறும் என்பதைத் தெளிவாகக் கூறு கின்றார் தருஷணா சந்திரசேகரன்.
தமிழ்ப்பள்ளியில் அமலாக்கம் கண்ட கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் போதிக்கும் நடைமுறை தன்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாகக் கூறும் இவர், தமிழ்ப்பள்ளியில் கிடைத்த மொழி ஆற்றலின் வழி உயரிய பொறியியல் துறையில் பயிலும் வாய்ப்பினை பெற்றுத் தந்த தாகத் தெளிவு படக் இவர் கூறுகின்றார். தமிழ்ப்பள்ளிகளின் வழி உயரிய நிலையை அடைவதற்கு எந்தவிதமான தடைக்கற்களும் இல்லை என்பதாக தெளிவுபட கூறுகின்றார் தருஷணா சந்திரசேகரன்.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்