img
img

பத்திரிகையாளர்களுக்கு  எஸ்பிஆர்எம் பாராட்டு 
ஞாயிறு 17 டிசம்பர் 2017 16:25:59

img

(பெருஜி பெருமாள் - படங்கள் ஆர்.குணா)

புத்ராஜெயா,

எஸ்பிஆர்எம் புதிய தலை மையக மண்டபத்தில்  நேற்று முன்தினம் பத்திரிகையாளர் களுக்கான நன்றி பாராட்டு நிகழ்வு நடந்தேறியது. இது ஓர் உற்சாக ஊடக இரவு. 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி முதல் தாம் பொறுப்பேற்றதிலிருந்து ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு பத்திரிகை தரும் ஆதரவு தம்மை மெய் சிலிர்க்க வைத்துள்ளதாக தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஸூல்கிப்ளி தெரிவித்தார். 

ஸ்டார், நன்யாங் சியாங் பாவ், மலேசிய நண்பன் ஆகிய மூன்று பத்திரிகை நிறுவனங்களுக்கு இவர் தமது பிரத்தியேக  நன்றி யினை தெரிவித்துக் கொண்டார். மலேசிய நண்பன் நிர்வாக இயக்குனர் டத்தோ ஷாபி ஜமா னுக்கு சிறப்பு செய்யப் பட்டது. ஊழல் எதிர்ப்பு கருத்துகள்  மக்கள் மனங்களில் விதையாக விதைக்கப்படுகிறது. மக்களின் மனப் போக்கினை மாற்றும் மகா சக்தி பேனாமுனைக்கு உள்ளது. எஸ்பிஆர்எம்மின் மீதிலான மக்களின் நம்பிக்கையினை - நம்பகத்தன்மையினை வலுப் படுத்தக்கூடிய ஆயுதம் எழுத்து.

கையூட்டு வாங்கவும் வேண் டாம் - வழங்கவும் வேண்டாம் என்ற முழக்கத்தை பட்டித்தொட்டிகளில் பரப்புரை  செய்வதற்கும் பறை சாற்றுவதற்கும் ஊடகத் துறை உறுதுணையாக உள்ளது. பத்திரிகைத் துறை மட்டும் பக்க பலமாக இல்லாவிட்டால்  எஸ்பிஆர் எம்மின் செயல்பாடு எல்லாம் எடுபடாமல் போய்விடும். ஆணையத்தின் ஊழல் தடுப்பு நடவடிக்கையின் தாக்கம் எல்லாம் மக்களிடம் சென்று சேராமல் போய்விடும் என்று தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஸூல்கிப்ளி எழுச்சிகரமாக எடுத்துரைத்தார். பத்திரிகையாளரின் பங்களிப்பு எங்களுக்கு ஊக்க மருந்து.

நாடும் வீடும் ஊழல் என்று புரையோடிக் கிடக்கும் புற்று நோயிலிருந்து விடுபட வேண்டும். நாடும் எதிர்கால தலைமுறையினரும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக வலையில் சிக்கி சீரழிந்து விடக் கூடாது. ஊழல் எதிர்ப்பு என்பது ஒரு தேசிய விவகாரம். இதனை கையாளுவது எளிதான காரியமல்ல. எனவே அனைத்து தரப்பின் ஆதரவு அத்தியா வசியம். எஸ்பிஆர்எம்மின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து   தரப்பினரும் தொடர்ந்து  பக்கபல மாக இருக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ  ஸூல்கிப்ளி வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாண்டு மே மாதம் 4ஆம் தேதியன்று வட்ட மேஜை விவாத மன்றம் அமைக்கப் பட்டது.  எஸ்பிஆர்எம்மின் ஆணையத்திற் கும் ஊடகத் துறைக்கும் இடையே கருத்து பரிவர்த்தனைக் கான கருத்து களம் இது. ஊழலை படரவிடாதீர். இந்த கொடிய மிருகத்தின் கொட்டம் ஒடுக்கப்பட வேண்டும். பொது நல அறிவிப்பு அடிப்படையில் பல தலைசிறந்த வீடியோ படைப்புகளும் பரிசும் பாராட் டுப் பத்திரமும் வழங்கப்பட் டது. வெற்றியாளர்களுக்கு துணை தலைமை ஆணையர் டத்தோ அஸாம் பாகி சிறப்பு செய்தார். மலேசிய நண்பன் சார்பில் நண்பன் நிர்வாகி பிரகாஷ் மற்றும் ஞாயிறு பதிப்பு ஆசிரியர் கு.ச. ராமசாமியும் கலந்து கொண்டனர். இதர ஊடக பிரதிநிதிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img