பெயர்: கலாஷினி ஜெயக்குமாரன்
தமிழ்ப்பள்ளி: மேரு சாலை தமிழ்ப்பள்ளி கிள்ளான்
பல்கலைக்கழகம்: மலாயா பல்கலைக்கழகம்
துறை:உயிரியல் மருத்துவ பொறியியல் (ஆண்டு1)
முதலாம் ஆண்டின் கல்வி பயணத்திற்கு விதையாய் அமைந்த கிள்ளான் மேரு சாலை தமிழ்ப்பள்ளியே தனது எதிர்கால இலக்கினை வடிவமைத்ததாகப் பெருமையோடு கூறுகின்றார் மலாயா பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ பொறியியல் (Bio Medical Engineering) துறையின் முதலாம் ஆண்டு மாணவியான கலாஷினி ஜெயக்குமாரன்.
கோ.ஜெயக்குமாரன் - மல்லிகா தம்பதியரின் மூன்று பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையான இவரின் லட்சியக் கனவுகளுக்கு அடித்தளம் அமைத்த வர்கள் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்களே என்பதை ஆணித்தரமாக கூறுகின்றார். யூபிஎஸ்ஆர் தேர்வில் 6 ஏயும், பி.எம்.ஆர். தேர்வில் 8 ஏயும், எஸ்பிஎம் தேர்வில் 10 ஏயும் பெறுவதற்கான வாய்ப்பினை தமிழ்ப்பள்ளியே வழங்கியதாகக் கூறும் கலாஷினி ஜெயக்குமாரன் தனது தொடர் கல்வியை மலாக்கா மெட்ரிகுலேஷன் கல்லூரியில் ஓராண்டு கல்விக்குப் பின்னர் மிகச் சிறந்த தேர்ச்சியினைப் பெற்று மலாயாப் பல்கலைக் கழக வாய்ப்பினைப் பெற்றுள்ளதாக கூறினார். தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களின் எதிர்காலத்தினை செதுக்கும் கூடங்களாகவே அமைந் திருப்பதாக பெருமையோடு இவர் கூறுகின்றார்.
முதலாம் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு வரை அறிவியலையும், கணிதத்தையும் ஆங்கில மொழியில் பயிலும் வாய்ப்பினால் இடைநிலைப் பள்ளியில் மிகச் சிறந்த ஆங்கில மொழி ஆற்றலைப் பெற்றதோடு பிற மாணவர்களோடு எல்லா பாடங்களிலும் போட்டியிடும் ஆற்றலைப் பெற்றதாகக் கூறிய ஜெ.கலாஷினி கிள்ளான் கான்வெண்ட் இடைநிலைப் பள்ளியின் பரிசளிப்பு விழாவில் படிவம் 5க்கான ஆங்கில மொழிப் பாடத்தில் மிகச் சிறந்த மாணவி யாகத் தேர்வு பெற்றதை மிகச் சிறந்த வெற்றியாகக் கருதுவ தாகக் கூறியுள்ளார்.
உயிரியல் மருத்துவ பொறியியல் துறையில் முனை வர் கல்வியைப் பெறுவதை தனது இலக்காகக் கொண்டிருக்கும் ஜெ.கலாஷினி அறிவியல் கண்டு பிடிப்பாளராகும் (scientist) கனவினை விதைத்திருப்ப தாகவும் கூறியுள்ளது. தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியையே பிரதிபலிப்பதாக அறிய வேண்டி யுள்ளது. -தமிழ்ப்பள்ளியே நமது இலக்கு.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்