img
img

மலேசிய நண்பனின் ஆதரவுடன் தமிழன் விருதுகள் 2018
ஞாயிறு 17 டிசம்பர் 2017 09:52:18

img

(பி.வி. சசி - கே.வி.சுதன்)

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மலாயா பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருக்கும் மலேசிய தமிழர்களின் சாதனைகளை எடுத்துரைக்கும் ‘தமிழன் விருதுகள் 2018’ நிகழ்ச்சியின் இசைக் காணொளி   டி.எஸ்.ஆர். திரையரங்கில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது. மலேசிய நண்பன்  நிர்வாக இயக்குனர் டத்தோ ஷாபி ஜமான், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் , செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. முனுசாமி, பிளேக் ஹோர்ஸ் நிறுவன உரிமையாளர் டேவிட்,  ஸ்ரீமூடா தங்கும் விடுதி உரிமையாளர் தில்லை ஆகியோர் இந்த இசைக் காணொளியை வெள்ளிக்கி ழமையன்று வெளியீடு செய்தனர்.

மலேசிய தமிழர்கள் குண்டர் கும்பல் கலாச்சாரங்களின் பிரதிபலிப்பாக வாழ்கிறார்கள் என்பது போன்று ஒரு சில தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும் தவறான கண்ணோட்டத்தை முறியடிக்கும் வகையில்  இங்கு வாழும் தமிழர்களின் வாழ்வியல் சமூக மேம்பாடுகளில் நிறைவாக சேவையாற்றியவர்க ளையும் பல துறைகளில்  சாதனைகள் புரிந்தவர்களையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த தமிழன் விருதுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மலேசிய தமிழர்கள் இங்கு மிகவும் சிறந்த நிலையில் பல்வேறு துறைகளில் உயர்வு கண்டுள்ளனர் என்பதை எடுத்துக்கூறும் வகையில் சுமார் 30 க்கும் மேற்பட்ட, குறிப்பாக கலைத்துறை, விளையாட்டுத்துறை, எழுத்துத்துறை, சிலம்பம், தொழில்துறை, வர்த்தகம் உட்பட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த வர்களின் சேவைகள், சாதனைகளுக்கு இந்த தமிழன் விருதுகள் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  வழங்கப்படவிருப்பதாக ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் உமா காந்தன் கிருஷ்ணன் கூறினார்.

இசைக் காணொளி தயாரிப்பில் அதன் பிரதான பாடலை கனகராஜா, உமா காந்தன், ஜேக் நோ எண்ட்ரி, யோக சித்தன் ஆகியோர் கவிதை வரிகளை எழுதி யுள்ள நிலையில் அவர்களோடு இணைந்து கவிமாறன், கார்த்திகா ஆகியோரும் பாடியுள்ளனர்.மலேசிய நண்பன் ஆதரவுடன் நடைபெறவுள்ள இவ்விருது நிகழ்ச்சியின் இசைக் காணொளி வெளியீட்டில் டத்தோ ஷாபி ஜமான் அதன் முதல் இசைவட்டை வெ.5,000 கொடுத்து  வாங்கி ஆதரவு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இன்னும் பல இயக்கங்கள் பெருமனதோடு முன்வந்து இவ்விருது நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேல் விவரங்களுக்கு 010- 2442509 என்ற எண்ணில் கனகராஜாவுடன் தொடர்பு கொள்ளலாம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img