‘அடியோஸ்’ என்ற ஸ்பானிய மொழி வார்த்தைக்கு ஆங் கிலத்தில் ‘குட்பை’ அல்லது தமிழில் வந்தனம் என்று அர்த்தம். ஒருவரிட மிருந்து பிரியாவிடை பெறும்போது இதனை பயன்படுத்து கிறோம். ஆனால், நம் நாட்டின் ஜெலுத் தோங் நாடாளுமன்ற தொகுதி ஜ.செ.க. பிரதிநிதியான ஜெஃப்ரி ஊய்-யை பொறுத்த வரையில் அவர் இந்த வார்த் தையைப் பயன்படுத் தியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் சொன்ன வார்த்தக் தவறல்ல. ஆனால், அவர் அதனை பயன்படுத்திய சூழ்நிலைதான் தவறு. நாட்டின் மூத்த எதிர்க்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங்கிடம் வேண்டுமானால் அவர் அடியோஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம். அது சரியானதாகவும் இருந்திருக்கும். ஆனால், பாஸ் கட்சியைச் சேர்ந்த, அண்மையில் காலமான சமய ஆலோசகருக்கு அவர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியது முஸ்லிம்களின் உணர்வுகளை அதிகமாகவே பாதித்துள்ளது. ஊய் ஒரு மலேசிய அரசியல்வாதி. அதிலும், 2008-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். மலேசிய அரசியலில் நிலவும் இதுபோன்ற சிக்கலான விஷயங்களைப் பற்றி மற்றவர்களை விட அவர்தான் அதிகம் அறிந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலமான ஒரு இஸ்லாமிய சமய ஆலோசகருக்கு அடியோஸ் என்று டுவிட்டரில் அவர் கூறியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக, முஸ்லிம் சகோதரர்கள் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். சமய உணர்வுகளை மதிக்காத குற்றத்திற்காக ஊய் போலீஸ் விசாரணைக்கும் ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்