(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர்பாரு,
உலக அளவில் தைவானில் நடைபெற்ற புத்தாக்கப் போட்டிகளில் ஜொகூர்பாரு ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப் பள்ளியின் இரு மாணவர்கள் இரு தங்கங்களை வென்று உலக அளவில் ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியின் பெயரை முத்திரை பதித்துள்ளனர். மாணவர்கள் இளவரசன் சுப்பிர மணியம் மற்றும் முகிலன் கோவலன் ஆகியோர் வண்ண குருட்டுத் தன்மையை அறிந்துக் கொள்ளக்கூடிய கருவியை அறிமுகப்படுத்தி அதன் பயன் பாடு களையும் அறிஞர்களிடம் விளக்கி அவர்களின் தீர்ப்பின் மூலம் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
அதேவேளை ஸ்ரீலங்கா நாட்டின் சிறப்பு மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தையும் இரு மாணவர்களும் வென்றுள்ளனர். கடந்த டிசம்பர் 8ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் உலக நாடுகளிலிருந்து மொத்தம் 341 போட்டியாளர்கள் பங்கு கொண்டதாக இந்த இரு மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கிய ஆசிரியை திருமதி லோகேஸ்வரி முருகன் தெரிவித்தார். உலக அரங்கில் தமிழ்ப்பள்ளிகள் கால்பதித்து வருவது தமிழ்ப்பள்ளிகள் மீது சமூகத்தின் பார்வை பெருமைக் கொள்ள வைக்கும் என நம்பப்படுகின்றது. இதனிடையே இப்போட்டியில் ராமகிருஷ்ணா, ஜெஞ்சாரம், பூச்சோங் ஆகிய தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்