img
img

18 ஆண்டுகளாகத் தூங்காத இரவுகள்
வியாழன் 22 செப்டம்பர் 2016 14:15:39

img

ஒவ்வொரு முறையும் மழை பெய்தால் கால்வாய் கள் நிரம்பி வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து விடும். கடந்த 18 வருடங்களாக இரண்டு தலைமுறைகளைத் தாண்டியும் இப்படியே வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு பல தூங்காத இரவுகளைக் கடந்து வருவது தொடர்கதையாக இருக்கிறது என்று கிள்ளான் பாயு பெர்டானா குடியிருப்பாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கிள்ளான் ஊராட்சிமன்றத் தரப்பினரும் வடிகால் நீர்பாசனத்துறையும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதால்தான் இந்த நிலைமை ஏற்படுகிறது. இதன் தொடர்பில் எவ்வளவோ புகார் செய்தும் சலித்துப் போனதுதான் மிச்சம், என்று செய்தியாளர்களிடம் அவர்கள் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர். அரை மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்தால் போதும். குடியிருப்பின் சுற்றுப்புறக் கால்வாய்களில் நீர் நிறைந்து மேலெழும்பி பெரும்பாலான வீடுகளின் முன்புறப் பகுதிகளிலிருந்து சமையல் கட்டு வரை வெள்ளம் புகுந்து விடும். சம்பந்தப்பட்ட குடியிருப்பின் சுற்றுவட்டாரச் சாலைகளில் குறிப்பாக வெள்ள கனநீர் வரையற்ற நிலையில் கரைபுரண்டு அடித்துச் செல்லும் ஜாலான் பெகாகா, ஜாலான் செத்தாகா இண்டா பகுதியில் அகண்ட கால்வாய் அமைக்கப்பட்டிருந்தும் அப்பகுதிகள் அடிக்கடி வெள்ளத்தால் பெருமளவில் சேதமடைந்து வருகிறது, என்று அக்குடியிருப்புச் சங்கத் தலைவர் பீட்டர் யாப், உதவித் தலைவர் ஜி.மோகன் இருவரும் கூறினர். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் ஒட்டுமொத்த வேண்டுகோளாகும் என்று பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர் வி.சுப்பிரமணியம் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img