கோலாலம்பூர்,
கடத்தப்பட்டு 13 மணிநேரம் மாட்டுப் பண்ணையில் வைத்து கருப்பு துணியால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மாது ஜோதிமணி தாக்கப்பட்ட சம்பவம் அவருக்கு மறக்க முடியாத கசப்பான அனுபவமாக அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் மாது எஸ்.ஜோதிமணி அடை யாளம் தெரியாத மூன்று நபர்களால் கம்போங் ஜாவாவில் கடத்தப்பட்டார். மெர்சிடிஸ் பென்ஸ் ரகக் காரில் வந்த மூவரில் ஒருவர் ஜோதிமணியிடம் பேசிய வாக்கில் அவரை காரில் இழுத்து தள்ளி கடத்திச் சென்ற காட்சிகள் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளன.
கடத்தப்பட்ட மாது பக்கத்திலுள்ள மாட்டு பண்ணைக்கு கருப்பு துணியால் கண்களை கட்டிய நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சுமார் 50 மீட்டர் அம்மாது தரையில் தர தரவென இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாதின் அண்ணன் எஸ்.மணிமாறன் (வயது 50) தெரிவித்தார். என் தங்கையை கடத்தியவர்கள் இந்திய ஆடவர்கள்என்பது ரகசிய கேமராவின் காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. அவரை கடத்தியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றார்.
கடத்தப்பட்ட என் தங்கை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையிலும் முதுகிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் அவரின் கை விரலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக எஸ்.மணிமாறன் தெரிவித்தார்.அம்மாதை கடத்திய கும்பல் அவரை கடத்தப்பட்ட இடத்திலிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் கடத்திய அதே நாள் இரவு 10.30 மணியளவில் விட்டுச் சென்றுள்ளது.
Read More: Malaysia Nanban News paper on11.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்