தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் தேர்தல் ஆணையம் முன்வைத்த எல்லை மறு நிர் ணயம் மீதான பரிந்துரை குறித்து நிதானமாக யோசிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளனர். அப்பரிந்துரை தொடர்பில் கருத்துகளைத் தெரிவிக்க வழங்கப் பட்ட அவகாசத்தை அவை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம், அரசியலமைப்பு சட்டத்திற்கும் அதன் விதிமுறைகளுக்கும் ஏற்ப நிபுணத்துவ ரீதியில் அந்த யோசனையை முன்வைத்துள்ளது. அதனை பரந்த கண்ணோட்டத்தில் பார்த்து அணுக்கமாக ஆராய்ந்து அதன் பின்னர் கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்க வேண்டும் என ஜாஹிட் குறிப்பிட்டார். இவ்விவகாரத்தில், அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் செவிமடுக்க தேர்தல் ஆணையம் வெளிப்படையான போக்கை கடைப்பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைப் பகுதிகளை மறுநிர்ணயம் செய்யும் பரிந்துரை தொடர்பான கருத்துகளும் எதிர்ப்புகளும் சரியான அணுகுமுறைகளில் தெரிவிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. சட்டத்திற்கு உட்பட்டு தகுந்த முறையில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஆசிம் அப்துல்லா வலியுறுத்தினார். அப்பரிந்துரையை அணுக்கமாக ஆராயாமல் எந்தத் தரப்பையும் குறை கூற வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும், குறிப்பிட்ட சில தரப்பின் நலன் பேணும் நோக்கத்தில் தேர்தல் தொகுதிகளின் எல்லைப் பகுதிகளை மறுநிர்ணயம் செய்யும் பரிந்துரை முன்வைக்கப்பட்டிருப்பதாக சில தரப்புகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. தேர்தல் எல்லைகளை மறுசீரமைக்கும் விவகாரத்தில் முறைகேடு நிகழ்வதாகவும் அது குறிப்பிட்ட சில தரப்புக்கு மட்டும் சாதகமாக இருக்கிறது என கூறப்படுவது அடிப்படையற்றது என்றும் அவர் சொன்னார். தேர்தல் ஆணையம் இம்மாதம் 15 ஆம் தேதி தீபகற்ப மலேசியா மற்றும் சபாவின் நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதிகளுக்கான எல்லை மறு நிர்ணயம் மீதான ஆய்வைத் தொடங்கியது. அது தொடர்பில் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்த பரிந்துரைகள் அனைத்தும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பொது மக்களின் கருத்துகளை கண்டறிந்த பிறகே மக்களவையில் தாக்கல் செய்யப்படும். நாட்டின் சட்ட விதிமுறைகளின்படி தேர்தல் ஆணையம் பரிந்துரைகளை சமர்ப்பித்து உள்ளது. அதனை அங்கீகரிக்கும் அதிகாரம் முழுவதுமாக மக்களவையை சார்ந்தது. தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைப் பகுதிகளை மறுநிர்ணயம் செய்யும் பரிந்துரை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளை ஆளும் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் எழுப்பி வரும் நிலையில் ம.சீ.ச , கெராக்கான் போன்ற தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் அந்தப் பரிந்துரைக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.-தி மலேசியன் டைம்ஸ்
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்