கும்பகோணத்திற்கு சுற்றுலா சென்ற மலேசிய பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மலேசிய நாட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரின் மனைவி ஜெயந்தி (வயது 56).இவரது பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். கடந்த 30 ஆண்டிற்கு முன்பே மலேசியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் தன் மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் உட்பட 8 பேருடன் கடந்த 28-ந் தேதி சுற்றுலாவுக்காக தமிழகம் வந்தார்.
பின்னர் திருச்சி, ராமேஸ்வரம் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு செல்ல நேற்று மாலை வந்தனர். கும்பகோணம் நாற்சந்தியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
இந்நிலையில் நேற்று காலை விடுதி அறையில் இருந்த ஜெயந்தி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஜெயந்தியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜெயந்தி ஏற்கெனவே மாரடைப்பால் இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செது விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஜெயந்தி உடலை மலேசியாவுக்கு விமானம் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்