img
img

மலேசிய நண்பன் செய்தியின் எதிரொலி.
வியாழன் 07 டிசம்பர் 2017 12:33:13

img

கோலாலம்பூர்,

கடந்த 2017 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நாடு முழுவதும்  தமிழ்ப்பள்ளிகளுக்கான  ஒரு கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் 50 பாலர் பள்ளி வகுப்பறைகளை கட்டும் திட்டம் என்னவானது என்று மலேசிய நண்பன் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஏவுகணை சிந்தனை தொடரில் பெரும் கேள்வியை முன்வைத்தது. 2017 ஆம் ஆண்டுக் கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டு 13 மாதங்கள் கடந்த நிலையில்   தமிழ்ப்பள்ளிகளுக்கான 50 பாலர் பள்ளி வகுப்பறைகள் என்னவானது? 50 புதிய பாலர் பள்ளிகள் வருமா? வராதா? பாலர் பள்ளிகளுக்கான தமிழ்ப்பள்ளிகள் அடையாளம் காணப்பட்டதா? வாக்குறுதிகள் மறுக்கப்படுமா? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது. எனினும் நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற நிகழ்வில் 33 தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 புதிய பாலர் பள்ளிகள் கட்டும் திட்டத்திற்காக ஒரு கோடி வெள்ளிக்கான மாதிரி காசோலைகளை மஇகா தேசியத் தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தேஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அரசாங்கம், அறிவித்ததைப் போல தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 புதிய பாலர் பள்ளிகள் கட்டுவதற்கு ஒரு கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த 50 பள்ளிகளுக்கும் தலா 2 லட்சம் வெள்ளி செலவில் ஒரு பாலர் பள்ளி கட்டப்படும் என்று டாக்டர் சுப்பிரமணியம் அறிவித்தார்.

புதிய பாலர் பள்ளிகளை கட்டும் திட்டம் அடுத்த வாரம் தொடங்கும் என்று  குறிப்பிட்ட டாக்டர் சுப்பிரமணியம், 25 மாணவர்கள் அமரக்கூடிய ஒவ்வொரு வகுப்பறையும்  இரண்டு, மூன்று மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சொன்னார்.

இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் தோற்றம் மற்றும் அவற்றின் கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கொண்டுள்ள கடப்பாட்டையே இது காட்டுவதாக டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார். பாலர் பள்ளி என்பது மிக முக்கியமானதாகும். அது தொடக்க கல்வி என்பதால் மாணவர்கள் முதல் வகுப்பில் செல்வதற்கு ஏதுவாக தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கு இது உதவுவதாக அவர் சொன்னார்.

தற்போது நாடு முழுவதும் 206  தமிழ்ப்பள்ளிகளில்  262 பாலர் பள்ளிக்கான வகுப்பறைகள் உள்ளன. தற்போது மேலும் 33 தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 வகுப்ப றைகள் கட்டப்படுவதால் பாலர் பள்ளிகளை கொண்டுள்ள தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை  239 ஆக அதிகரிக்கும் என்பதுடன் வகுப்பறைகளின் எண்ணிக்கையும் 321 ஆக உயரும் என்று டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img