கிள்ளான்,
இறுதியில் நாடு திரும்ப போகிறோம் என்ற மகிழ்ச்சியில் மலேசியாவைச் சேர்ந்த தேவசூரியா சுப்பிரமணியம் இருந்தார். ஆனால் அவரது சந்தோஷம் குறுகிய நேரமே நீடித்தது. தமிழ்நாடு திருச்சியில் விமானம் ஏறவிருந்த வேளையில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். தேவசூரியா (வயது 37) தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட கூடுதல் நாட்கள் தங்கிவிட்ட காரணத்தால் விமானம் ஏறுவதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவருடைய மலிண்டோ ஏர் விமான டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டது. என்ன செய்வது என எனக்குத் தெரியவில்லை. என் கணவரின் வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு வர எனக்கு ஆறு மணி நேரம் பிடித்தது. இப்போது நாங்கள் அங்கே திரும்பி செல்லவேண்டும் என்று தேவசூரியா இந்தியாவில் இருந்து தொலைபேசியில் கலக்கத்துடன் கூறினார்.
கூடுதல் நாட்கள் தங்கியதற்காக இந்திய அதிகாரிகளால் அவருக்கு அபராதமும் விதிக்கப் பட்டு இருக்கிறது.மூன்று மாத கால விசாவில் தமிழ்நாட்டிற்குச் சென்ற அந்த மாது, 45 நாட்களுக்குப் பிறகு அந்த விசா புதுப்பிக்கப்பட வேண்டும் என அச்சடிக்கப்பட்டு இருந்த வாசகத்தை படிக்க தவறிவிட்டார்.
Read More: Malaysia Nanban News Paper on 6.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்