(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு,
இந்தியாவின் புதுச்சேரியில் நடைபெற்ற அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டியில் ஜொகூரின் இரு தமிழ்ப்பள்ளி மாண்வர்கள் வாகை சூடியிரு ப்பது கண்டு மிகவும் பெருமைக் கொள்வதாக ஜொகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் சி.பாண்டுரெங்கன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழ் நாட்டில் இருக்கும் சி.பாண்டு ரெங்கன் புலனம் வழி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் இவர்களின் வெற்றி ஜொகூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டுமின்றி மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியும் அங்கீகாரமுமாகும் என குறிப்பிட்டார்.
கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டியில் முறையே யூபிஎஸ்ஆர் தேர்வில் 7 ஏ பெற்ற கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி மாணவர் ஏ.ரவின் நாய்க்கர் அசோக்குமார் முதல் நிலையிலும் மாசாய் தமிழ்ப்பள்ளி மாணவர் சஸ்வின்ராஜ் செல்வமணி மூன்றாவது நிலையிலும், வந்து வாகை சூடியிருப்பது மலேசியத் தமிழர்களும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.
Read More: Malaysia nanban News paper on 6.12.2017
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்