கோத்தா பாரு,
இரு குழந்தைகளுக்கு தந்தையான ஆடவர் 15 வயதுடைய சிறுமியை மானபங்கம் செய்த குற்றத்தை இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்தார். மனைவியின்றி இரு குழந்தைகளுடன் இருக்கும் அந்த ஆடவர் மானபங்கம் செய்த இளம்பெண் அவரின் காதலி என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணை இவர் இருமுறை மானபங்கம் செய்துள்ளார்.
நீதிபதி அகமட் பாஸில் முன்னிலையில் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை முகமட் பக்ருல் பஸ்லி (வயது 33) நீதி மன்றத்தில் மறுத்தார்.
கடந்த மார்ச் மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் வரையில் இடைப்பட்ட நாளில் பெரிஸ் குபோர் பெசார் எனும் இடத்திலுள்ள வீட்டில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் இளம்பெண்ணை மானபங்கப் படுத்தியுள்ளார். இரண்டாவது முறை அவ்வாடவர் அந்த இளம்பெண்ணை கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் மானபங்கப் படுத்தியுள்ளார். தற்போது அப்பெண் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசா ரணை அடுத்தாண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்