(ப.சந்திரசேகர்) ஈப்போ,
வடக்கு-தெற்கு விரைவு நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று தங்களின் காரின் மேல் மோதியதில் 16 வயது நிரம்பிய ஆர். விஜேந்திர ராவ் மற்றும் 13 வயதான ஆர். ஷங்கர் ராவ் என்ற சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவ்விருவரின் தாயார் கடுமையான காயங்க ளுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில், விஜேந்திர ராவ் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டதாகவும் அவரின் தம்பி ஷங்கர் ராவ் தைப்பிங் மருத்து வம னையில், சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாகவும் தைப்பிங் இடைக்கால போலீஸ் படைத் தலைவர் ரஸ்லாம் அப்துல் ஹமீட் கூறினார். அவ்விபத்து ஏற்படும் போது, அவ்விரு பதின்ம வயதினரும், தங்கள் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
காரை ஓட்டிச் சென்ற அவர்களின் மாற்றாந் தந்தை கே.ஷங்கர் கணேஷுக்கு இவ்விபத்தில் சிராய்ப்பு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்று ரஸ்லாம் சொன்னார். மரணமடைந்த அந்தச் சிறுவர்களின் தாயாரான ஆர்.கோமதிக்கு தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது
Read More: Malysia Nanban News Paper on 6.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்