தாமான் புத்ரி வங்சா குடியிருப்புப் பகுதியிலுள்ள தொடர் வீட்டின் அறையொன்றில் திருமதி நவமணி த/பெ முத்தையா (வயது 56), அவரின் ஒரே மகள் துர்காதேவி த/பெ செல்லமுத்து (வயது 16) ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றுக் காலை 10.00 மணிக்கும் 10.30 மணிக்கும் இடையே, ஜாலான் பெல்டாவ் 40, தாமான் புத்ரி வங்சா குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்ததாக பண்டார் ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜொக்ரி பின் அப்துல் அஜிஸ் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட நவமணி உடல் பகுதி கால்கள், கைகள் போன்ற இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் அறையின் மெத்தையிலும், அவரின் மகள் துர்காதேவியின் உடல் தரையில் கிடக்கக் காணப்பட்டதாக அவர் சொன்னார். நவமணியின் கணவர் நேற்றுக் காலை 9.40 மணியளவில்தாமான் ஜொகூர் ஜெயாவுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு, தன் தாயாரை ஜாலான் ரெம்பியாவிலுள்ள வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு அவரின் மகன் எஸ்.பிரபாகரன் (வயது 33) சென்றிருக்கிறார். வீட்டிற்கு சென்றபோது வீட்டின் முன் கேட்டு கதவும் வீட்டின் கதவும் திறந்த நிலையில் இருந்ததைப் பார்த்து அம்மா, அம்மா என்று அழைத்திருக்கிறார். வீட்டிலிருந்து எந்த சத்தமும் வராததால் வீட்டின் உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அறை ஒன்றின் கதவை திறந்தபோது தமது மூன்று வயது பெண் குழந்தை அழுத வண்ணம் இருந்ததாகவும், தாயார் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மெத்தையில் இருந்ததாகவும் தன் தங்கை தரையில் கொலைச் செய்யப்பட்டுக் கிடக்கக் காணப்பட்டதாக பிரபாகரன் சொன்னார். பிரபாகரன் உடனடியாக தந்தைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அவரது தந்தை செல்லமுத்து வீட்டிற்கு வருவதற்குள் போலீஸ் குழுவினர் வீட்டிற்குள் நுழைந்து விசாரணையை மேற்கொண்ட வண்ணம் இருந்தனர். படிவம் நான்கில் படிக்கும் துர்காதேவி நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. காரணம், தன் சகோதரர் பிரபாகரனின் மனைவிக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தையை அவரும் அவரின் தாயாரும் போய் பார்க்க விருந்ததால் துர்காதேவி பள்ளிக்குப் போகவில்லை என்று அவரது தந்தை தெரிவித்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது வீட்டில் எந்த பொருட்களும் களவு போகவில்லை என்று தெரிவித்தனர். வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இருந்தும் அது இயங்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இக்கொலைச் சம்பவத்தில் குறைந்த பட்சம் இருவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் கொலை யாளிகள் மோட்டார் சைக்கிளில் வந்து கொலை செய்துவிட்டு தப்பித்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட மனைவியையும், மகளையும்பார்க்கவிடாமல் போலீசார் அவரது கணவரை நான்கு மணி நேரம் வெளியே நிறுத்தியது வேதனை அளிப்பதாக அவர்களது உறவினர் கண்ணன் கூறினார். கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஜொகூர்பாரு சுல்தான் இஸ்மாயில் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்