img
img

கின்னஸ் உலக சாதனையாளர் புத்தகத்தில் மலேசிய பரதநாட்டிய மாணவர்களின் பெயர்
செவ்வாய் 05 டிசம்பர் 2017 14:25:19

img

(சுப்ரா, காஜாங்)

பரத நாட்டியத்திலும் உலக சாதனையை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சான்றாக  அண்மையில் தமிழகத்தின் சென்னையில் சவீதா பல்கலைக்க ழகத்தில் நடைபெற்ற ஒரு மாபெரும் பரதநாட்டிய நிகழ்வில் கலந்து கொண்டு  சாதனை படைத்துள்ளனர் காஜாங் நாட்டியாஞ்சலி  நடனப்பள்ளியை பிரதி நிதித்துச் சென்ற  35 மாணவர்கள். 

கடந்த 2.12.2017 இல் நடைபெற்ற   இந்த நிகழ்வில் மொத்தம் 5,050  மாணவர்கள் கலந்துகொண்டு கின்னஸ் உலக சாதனையாளர் புத்தகத்திலும் ஆசியா சாதனையாளர் புத்தகத்திலும் தமிழ் நாட்டு சாதனையாளர்  புத்தகத்திலும் தங்களது பெயரை பதிந்துள்ளனர். 

காஜாங் நாட்டியாஞ்சலி கலைமன்றத்தின் ஸ்தாபகர் ஸ்ரீமதி நிஷா குமார் தலைமையில் சென்ற  மலேசிய  குழுவினர் அங்கு  பிரமாதமாக நடனம் வழங்கி னைவரது பாராட்டையும் பெற்றதாக இந்நிகழ்வை காண நேரடியாக சென்ற  மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.  நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த இக்குழுவினரை வரவேற்க நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். 

பல சவால்களுக்கிடையே தாம் இந்த 35 மாணவர்களை சென்னைக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு நமது மாணவர்கள்  திறமையாக நடனம் வழங்கி பலரின்  பாராட்டை பெற்றது தமது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என ஸ்ரீமதி நிஷா குமார் கூறினார். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் உலக கின்னஸ் சாதனையாளர் புத்தக அமைப்பின் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு: விவேகம் விதைத்த தமிழ்ப்பள்ளி ஆண்டு 5/18

தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய

மேலும்
img
பிடி 3 தேர்வில் இந்திய மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி: மயில்வண்ணன் 9ஏ பெற்று சாதனை!

பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு : வெற்றிக்கு வித்திட்ட தமிழ்ப்பள்ளி ஆண்டு 5/16

பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்

மேலும்
img
டெக் டெரெய்ன் கல்லூரியின் 10ஆவது பட்டமளிப்பு விழா - 400 திவெட் பட்டதாரிகளுக்கு வேலை உத்தரவாதம்

டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற

மேலும்
img
தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் இணைத்து வாழ்க்கையில் உயரவைத்த தமிழ் உணர்வாளர் ந.பச்சைபாலன்-ரே.கமலாதேவி தம்பதியர்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img