img
img

வெற்றிலை பயிரீட்டில் சாதனை படைக்கும் இந்தியர்கள்.
செவ்வாய் 05 டிசம்பர் 2017 13:40:45

img

சிப்பாங், 

உழைப்பவர் வாழ்வில் வெற்றியுண்டு தோல்வி யில்லை என்பர். அதைப் போன்று வெற்றிலை பயிரி டும் தொழிலில் பொறுப்பற்ற தனத்தையும் கவனக்குறை வையும் அருகில் நெருங்கவிடாமல் கண்ணும் கருத்துமாக உழைக்க முற்பட்டால் பொருளாதாரத்தில் உயர்ந்த இலக்கிற்கு கொண்டு செல் லும் அளவிற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனை இன்று இந்திய சமுதாயத்தில் பலரும் நிரூபித்து காட்டி வருகின்றனர்.

வெற்றிலை பயிரிடும் தொழிலில் அதிகமான இந்தியர்கள் ஈடுபட்டு வருவது  மட்டுமல்லாமல் மலேசியாவிலேயே வெளிநாடுகளுக்கு வெற்றிலையை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இத்துறையில் ஈடுபட்டுவரும் பந்திங் சிம்பாங் மோரிப், மோரிப், பத்து உந்தோங்,கிளானாங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வெற்றிலை பயிரிடுவோரை மலேசிய நண்பனுக்காக நேர்காணல் செய்தோம். அப்போது அவர்கள் முன்வைத்த கருத்துகள்,  கோரிக்கைகள், எண்ணங்கள் ஆகியவற்றை நண்பன் வாசகர் களுக்காக சமர்ப்பிக்கின்றோம்.

வெற்றிலை பயிரி டும்  தொழில் மட்டு மல்லாது எந்தத் தொழிலானாலும் அவற்றை விரும் பியே களத்தில் இறங்க வேண்டும். அவ்வகையில் வெற்றிலை பயிரிடும் தொழி லில் ஈடுபடுவோ ரின் உழைப்புக்கு ஏற்றதைவிட அதை யும் தாண்டி  ஒருபடி கூடுதலாகவே பலனைத் தரக் கூடிய தொழில் இதுவாகும். 

நம்மவர்கள் மற்ற இனத்தவர்களைப் போன்று  விவசாயத் துறைகளில் இன்னமும் எதிர்பார்த்த அளவிற்கு கால்பதிக்காத நிலைதான் ஏற்பட்டு வருகிறது. இதற்கு பொருளாதாரம் உட்பட  பல காரணங்கள் இருந்தாலும் அதிக மான பண மூலதனம் இல்லாமல் உழைப்பை மட்டும் அதிக மூலதனமாக கொண்ட வெற் றிலை பயிரிடும் தொழிலை முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ செய்து பார்க்கலாம் என  பத்து  ஆண்டுகளுக்கும் மேலாக   கோலலங்காட் மாவட்டத்தில் மட்டுமல்லாது நாட்டிலேயே அதிகமான வெற்றிலையை  உள்நாடு உட்பட சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்துவரும் பொ.சுந்தர், ஆ.பாஜரத்னம், பா.சோமசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.

வெற்றிலை பயிரிடும் தொழிலை  விளையாட்டுத் தனமாக மேற்கொண்டால் நம்மை அகல பாதாளத்தில் தள்ளிவிடும். ஆனால் அவற்றை முறையாக பாதுகாத்தால் விரைவில் நம்மை குபேரனாக்கக்கூடிய மவுசு மிகுந்த தொழில் இதுவாகும் என தெரிவித்தனர்.

இன்றைய இந்திய இளைஞர்களில் பலர் சொந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றாலும் அவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே  பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை எட்டியுள்ளனர். இன்றைய பொருளாதார மந்த நிலையில் பலரும் தங்கள் வர்த்தகத்திற்கு முழுக்கு போடும் நிலையினை எதிர்நோக்கி வருகின்றனர். ஆனால் என்றுமே மவுசு,  குறையாத வெற்றிலையை பயிரிடும் தொழிலில் ஈடுபடுவதாற்கு நம்மவர்கள் அச்சம் கொள்கின்றனர் என பொ.சுந்தர், பா.சோமசுந்தரம் கூறினர்.

கோலக்கிள்ளானில் உள்ள தொழில் பேட்டையொன்றில் பதினோரு ஆண்டுகள்  வரை மின்சார தொழில் நுட்ப என்ஜினியராகவும் வெள்ளி ஐயா யிரத்திற்கும் மேற்பட்ட ஊதியத்தில் தொழில் புரிந்து வந்த  பா.சோமசுந்தரம் தன் தந்தை மேற்கொண்டுவரும் வெற்றிலை பயிரிடும் தொழிலில் ஈர்க்கப்பட்ட தனால் தனது என்ஜீனியர் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கடந்த பத்து ஆண்டுகளாக வெற்றிலை பயிரிடும் தொழிலில் முழு நேரமாக ஈடுபட்டு வருவதாக  கூறும் இவர் முந்தைய ஊதியத்தைவிட இத்தொழிலில் அதிக வருவாயை ஈட்டிவருவதாக குறிப்பிட்டார்.

தொழிற்சாலையொன்றில் சாதாரண வேலை செய்து வந்த இங்குள்ள கிளானாங் பாருவைச் சேர்ந்த லெட்சுமணன் நடராஜன், தாம் வேலை செய்த தொழிற்சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து நண்பரின் ஆலோசனைக்கு ஏற்பவும் அவரின் உதவியுடன் சிறிய அளவில் வெற் றிலை பயிரிடும் தொழிலில் ஈடுப ட்டதாக கூறுகிறார் கிளானாங் பாருவைச் சேர்ந்த லெட்சுமணன் நடராஜன் என்ற இளைஞர். 

தற்போது முழு நேரமாக இத் தொழிலில் ஈடு பட்டு வருவதுடன் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரு வாயும் கிட்டி வருவதாக கூறி னார். நமது இளை ஞர்கள் ஏதாவ தொரு தொழில் துறையை தேர்வு செய்து அதில் அதீத கவனம் செலுத்தினால் வெற்றி காண முடியும் என்பதற்கு வெற்றிலை பயிரிடும்  தொழில் தக்க சான்றாகும் என கூறுகிறார்  இப்பகுதியைச் சேர்ந்த  சண்முகம்.

வெற்றிலை பயிரிடும் தொழிலில் சரிவு ஏற்படும்போது  அரசாங்கம் எங்களுக்கு உதவித்தொகை கொடுக்க முன் வர வேண்டும். தற்போது  தினமும் அடைமழை பெய்து வருவதால் இங்குள்ள இருபதுக்கும் மேற்பட்ட வெற்றிலை பயிரிடுவோர் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தஞ்சோங் சிப்பாட் கம்போங் பத்து உந்தோங் பகுதியைச் சேர்ந்த பெரியவர் ஆறுமுகம் தெரிவித்தார்.

இங்கு பத்து முதல் நாற்பது ஆண்டுகளாக  வெற்றிலை பயிரிடும் தொழிலில் ஈடுபட்டு வருவோர் சீதோஷ்ண நிலை சீராக இருக்கும் பட்சத்தில் அதிகமான வருவாயை ஈட்ட முடிகிறது என்றாலும் கோடை மழை காலங்களின்போது அதிகமான தண்ணீரின் காரணமாக எங்கள் பகுதியில் வெற்றி லைகள் பூச்சடித்துள்ளதுடன் அதன் அளவு குறுகியுள்ளதால் வழக்கமாக வெற்றிலையை மொத்தமாக வாங்கும் ஏஜெண்டுகள் அவற்றை வாங்குவதற்கு மறுக்கின்றனர்.

இதுபோன்ற வேளையின்போது பாதிக்கப்பட்ட வெற்றிலை தோட்டங்களில் மருந்து தெளிக்கவும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் எங்களுக்கு அரசாங்கம் தற்காலிகமாக உதவித் தொகையினை வழங்கினால் எங்களுக்கு பேருதவியாக இருக்குமென கூறுகின்றனர் கம்போங்  பத்து உந்தோங் பகுதி யில் வெற்றிலை பயிரிடும் தொழிலை மேற்கொண்டுவரும் ஆறுமுகம், பெ.சின்னக்குழந்தை, மு.சுசிலா, இ.மாரியம்மா, பெ.சுப்ரமணியம், ஏ.எல்லமாள், ரா.ருக்குமணி, சி.கமலா, வ.ருக்குமணி, வ.சிவபாலன் ஆகியோர்.

நாள் ஒன்றுக்கு நாற்பது வெற்றிலை கட்டுகள் கிடைக்கும் வேளையில் தற்போது மழை காலமாதலால் ஐந்து முதல் பத்து கட்டுகள் வரைக்கும் மட்டும் வெற்றிலை கிடைக்கிறது. அதிகமான வெற்றிலைகள் சிறுத்து விட்டதால் அவற்றை விற்பனைக்கு தயார்படுத்த இயலாமல் போகிறது என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

வெற்றிலை பயிரிடும் தொழிலில் ஈடுபடுவோர் அரசாங்கத்தின்  நிதியுதவியினை கோரலாம்.  ஸ்ரீதரனின்  விளக்கம்.

வெற்றிலை பயிரிடும் தொழிலில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருந்து வருகிறது. குறிப்பாக உரம், மருந்து உட்பட மேலும் பல தேவைகளுக்காக பெலாடாங், விவசாய இலாகா தெக்குன் மூலமாக குறைந்த வட்டியுடன் கூடிய கடன் வசதியினையும் பெற முடியும் என ம.இ.கா கோலலங்காட் தொகுதி இளைஞர் பகுதித்தலைவர் ரெ.ஸ்ரீதரன் கூறுகிறார்.

கோலலங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய இளைஞர்களில் எவரேனும் வெற்றிலை பயிரிடும் தொழில் மட்டுமல்லாது விவசாயம் சார்ந்த தொழிலை மேற்கொள்வதற்கு எண்ணம் கொண்டிருந்தால் தம்மை நேரில் சந்திக்கலாம் என கூறும் இவர் தற்போது வெற்றிலை பயிரிடும் தொழிலை மேற்கொண்டு வரும் பத்து இந்திய இளைஞர்களுக்கு அரசாங்கத்தின் மூலமாக உதவியினை கிடைப்பதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இன்றைய நிலையில் பட்டதாரிகள்கூட வெற்றிலை பயிரிடும் தொழிலில் முழு நேரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாம் ஒரு வழக்கறிஞராக இருந்தா லும்கூட நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெற்றிலை பயிரிட்டுவரும் தன் தந்தைக்கு உதவிட சென்று வருவதாக கூறும் இவர் எத்தொழிலாக இருந்தா லும் உழைப்பதற்கு கூச்சப்பட வேண்டிய அவசியமில்லை என சூளுரைத்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img