கோலாலம்பூர், டிச.5-
கணவர், மாமியாரின் இரக் கமற்ற செயலால் நாள் தோறும் அடி, உதை சித்ரவ தைக்கு ஆளாகி சொல்லொண்ணா துயரத்தில், சித்ரவதை என்னும் படுகுழியில் தள்ளப்பட்டு, ரண வேதனைக்கு ஆளான மலேசியப் பெண் தேவசூரியா, தமிழக போலீசாரால் மீட்கப்பட்டார். தமிழகத்தில் தாம் நம்பியவரை நாடி சென்று, அங்கே தனது உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவிற்கு அந்தப் பெண் ஆளானார்.
கோலாலம்பூரைச் சேர்ந்த தேவசூரியா சுப்பிரமணியம் என தன்னை அடையாளம் கூறிக் கொண்ட அந்த மாது தன் நான்கு வயது மகனுடன் நாடு திரும்ப இருப்பதாக தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிபுலி போலீஸ் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் கூறினார். அந்தப் பெண்ணை நாங்கள் அவரை ராமேஸ்வரத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தோம். அங்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. அவருடைய விமான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன என்று சதீஷ்குமார் தெரிவித்தார்.
தேவசூரியா உதவி கோரி விரக்தியில் அழுது கொண்டிருப்பதை காட்டும் ஒரு வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவிய போது அவருடைய அவல நிலை வெளியே தெரிய வந்தது. தன் மாமியாரும் கணவரும் சேர்ந்து தன்னை அடித்து சித்ரவதை செய்வதாகவும் தன்னை உடனடியாக காப்பாற்றி மலேசியாவிற்கு அனுப்பி வைக்குமாறு அந்தப் பெண் அழுத காட்சி, பலரின் இதயத்தை உறைய வைத்தது. தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என தான் அஞ்சுவதாகவும் அந்தமாது வீடியோவில் கூறியிருந்தார்.
Read More: Malaysia Nanban News paper on 12.5.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்