img
img

இந்தியர்களுக்கு இனி இடமில்லையா?
வியாழன் 22 செப்டம்பர் 2016 14:01:41

img

ஆயிரக்கணக்கான வாக்காளர்களை இடம்மாற்றி பல இனத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து இருக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் இந்தியர்கள் இனி எந்தத் தொகுதியிலும் நின்று வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக சபாய் ஜ.செ.க. சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி அச்சம் தெரிவித்துள்ளார். ஜ.செ.கவில் உள்ள இந்தியர்கள் மட்டுமல்லாது மஇகா வேட்பாளர்களுக்கும் இனி வெற்றி வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகி விடும். சட்டமன்றங் களிலும், நாடாளுமன்றத்திலும் இந்திய பிரதிநிதிகள் இடம் பெற முடியாத ஓர் இக்கட்டான நிலையை தேர்தல் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கை ஏற்படுத் தியுள்ளது என்று அவர் தெரிவித்தார். மஇகாவின் பாரம்பரிய சட்டமன்ற தொகுதியாக இருக்கும் சபாய் சட்டமன்றத்தை பல போராட்டங்களுக்கு பின் நாங்கள் கைப்பற்றினோம். இந்த சபாய் சட்டமன்றத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய மலாய் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் ஜ.செ.க. வேட்பாளரை தவிர்த்து மஇகா கூட அங்கு வெற்றி பெற முடியுமா. அதே வேளையில் சபாய் சட்டமன்ற தொகுதி முதலில் மஇகாவுக்கு கிடைக்குமா என பல கேள்விகள் எழுந்த வண்ணமாக உள்ளன. ஆகவே தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதை போன்று மஇகாவும் வாய் திறந்து தங்களின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று காமாட்சி செய்தியாளர்களிடம் கூறினார். தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் எல்லை மறு சீரமைப்பை ஆய்வு செய்தால் அது சீரமைப்பா அல்லது சீரழிப்பா என்று ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். தொகுதி சீரமைப்புக்கு எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்கள், மசீச, கெராக்கான் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. ஆனால் சிறுபான்மை இனமான இந்தியர்களின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை எதிர்த்து இதுநாள் வரை மஇகாவும், அதன் தலைவர்களும் வாய் திறந்து பேசவில்லை. அதே போன்று தேசிய முன்னணியின் தோழமை கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் இந்திய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையெல்லாம் பார்க்கும் அம்னோவும், தேசிய முன்னணியும் மஇகாவையும், இந்திய தோழமை கட்சிகளையும் மதிக்கவே இல்லை என்பது தெரியவருகிறது. வரும் பொதுத்தேர்தலில் நாங்கள் மட்டும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அம்னோவின் சுயநலத்தை இத்தலைவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ஆகவே மஇகா தலைவர் இவ்விவகாரம் குறித்து உடனடியாக வாய் திறந்து பேச வேண்டும். இல்லையென்றால் எங்களுடன் இணைந்து போராட வேண்டும். இது இரண்டையும் செய்ய முடியவில்லை என்றால் தேசிய முன்னணியில் இருந்து மஇகா வெளியேற வேண்டும் என்று சேவியர் ஜெயக்குமார் கூறினார். இந்தியர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் புதிய வாக்காளர்களை புகுத்துவது, இந்திய வாக்காளர்களை வேறு தொகுதிகளுக்கு மாற்றி விடுவது உட்பட தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அனைத்துமே இந்தியர்களின் அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். இந்திய சமுதாயம் இவ்விவகாரம் குறித்து முழு விழிப்புணர்வு பெற வேண்டும். இல்லையென்றால் இந்தியர்களின் உரிமைகள் அனைத்துமே பறிபோகும். ஆகவே சமுதாய மக்கள் இந்த தொகுதி சீரமைப்புக்கு முழு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். ஆங்காங்கே நடைபெறும் தொகுதி சீரமைப்புக்கான எதிர்ப்பு பாரங்களில் மக்கள் கையெழுத்திட வேண்டும் என்று சேவியர் கேட்டுக் கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img