(ப.சந்திரசேகர்) கம்பார்,
இந்திய மாது ஒருவர் தலையில் காயத்துடன் கழுத்து நெரித்து கொலை செய் யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். கம்பார் அருகில் உள்ள மம்பாங் டி அவான், தாமான் பெர்மாயில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் அந்தப் பெண்ணின் சடலம் கிடந்தது. எஸ். லெட்சுமி (வயது 28) என்று அடையாளம் கூறப்பட்ட அந்தப் பெண்ணின் சடலம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் செம்பனைத் தோட்டத்தில் கிடப்பதை கண்ட காளான் பறித்துக்கொண்டிருந்த 60 வயது ஆடவர், பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். கடந்த 24 மணி நேரத்தில்தான் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு இருக்கக்கூடும் என்று கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்ட். இங் கோங் சூன் தெரிவித்தார். அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்ட பின்னர், தலைகவசத்தால் தலையிலேயே அடித்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர். சவப்பரிசோதனைக்காக அந்தப் பெண்ணின் சடலம் கம்பார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இங் தெரிவித்தார்.
Read More: Malaysia nanban News paper on 2.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்