(பி. எம். குணா) கோலசிலாங்கூர்,
இங்கு முக்கிய கடற்கரையான ஜெரம் பந்தாய் ரெமிஸில், கடந்த மூன்று தினங்களாக பலத்த காற்று வீசுவதால் பேரலைகள் 6 மீட்டர் உயரம் வரை எழு கின்றன. வழக்கத்திற்கு மாறான இந்த பேரலையால் கிள்ளான் - கோலசிலாங்கூர் சாலை, 17ஆவது மைலில் உள்ள இக்கடற்கரையில், மூன்று வகை யான கடல் வாழ் உயிரினங்கள் கரையோரத்திற்கு அடித்து வரப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குவியல்- குவியலாக கிடக்கும் அந்த கடல் வாழ் உயிரினங்கள் இந்த டிசம்பர் மாதத்தில் வரும் சுனாமிக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று மீனவர்கள் அஞ்சுகின்றனர்.
இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அஞ்சுகின்றனர். கடலோரத்தில் குவிந்து கிடக்கும் அரிய வகை கடல் நத்தைகள், நண்டுகள், மீன்கள், சில அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்கு தினமும் மக்கள் கூட்டம் ஜெரம் கடற்கரையில் அலைமோதுகிறது. அதிகாலை 7.00 மணிக்கெல்லாம் இக்கடற்கரையில் திரளும் மக்கள் அம்மூன்று வகையான கடல் நத்தைகளை மூட்டை மூட்டையாக வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.
Read More: Malaysia nanban News paper on 2.12.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்