(பி.ஏ.கந்தையா) தெலுக் இந்தான்,
மலேசிய திரைப்பட தணிக்கை வாரியம் என ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா அல்லது தூங்கிக்கொண்டிருக்கிறதா என்று பினாங்கு பயனீட்டா ளர் சங்க கல்விப் பிரிவின் அதிகாரி என்.வி.சுபராவ் கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனித னைக் கடித்தது போன்று நம் நாட்டில் திரையிடப்படும் ஒரு சில தமிழ்ப்படங்களில் முன்பு இலைமறை காயாகக் காட்டப்பட்ட ஆபாச காட்சிகளும், நகைச்சுவை என்ற பெயரில் பேசப்படும் இரட்டை அர்த்த வசனங்களும் பாடல்களும் தணிக்கை செய்யா மல் நேரடியாகக் காட்டப்படுகின்றன.
உதாரணத்திற்கு ஒரு திரைப்படத்தில் எந்தவிதமான தணிக்கையும் செய்யாமல் அப்படியே திரையிடப் பட்டுள்ளது. இதில் பேசப்படும் வசனங்கள் சிறுவர் சிறுமியர் கூட புரிந்துகொள்ளும் அளவில் உள்ளன. இத்திரைப்படத்தில் நடித்த கதாநாயகி ஒரு பேட்டியில், இத்திரைப்படம் பெரியவர்களுக்கு மட்டுமே சிறுவர்களுக்கு அல்ல. பார்க்க விரும்பாதவர்கள் பார்க்க வேண்டாம் என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது திமிராகப் பேசியுள்ளார்.
இதுபோன்று பல ஆபாச திரைப்படங்களை அடையாளம் காட்ட முடியும். தனியார் தொலைக்காட்சியின் பெரும்பாலான தமிழ் நாடகங்களில் பெண்கள் பலே கில்லாடி வில்லிகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.
Read More: Malaysia nanban News Paper on 30.11.207
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்