புத்ராஜெயா,
வாழ்க்கைச் செலவினங்கள் உயர்வை கருத்தில் கொண்டு கடந்த 2012ஆம் ஆண்டு அரசாங்கம் அறிமுகப்படுத்திய குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 1,500 வெள்ளியாக உயர்த்தும்படி வலியுறுத்தி மலேசிய சோசலிச கட்சி (பி.எஸ்.எம்) நேற்று புத்ராஜெயாவிலுள்ள மனிதவள அமைச்சில் மகஜரை வழங்கியது.
இந்த மகஜரை அக்கட்சியின் ஆட்சிக் குழு உறுப்பினர் எஸ். அருட்செல்வம் மனிதவள அமைச்சின் தேசிய சம்பள ஆலோசனை மன்றத்தில் வழங்கினார். தேசிய சம்பள ஆலோசனை மன்றத்தின் செயலாளர் டி. சண்முகத்தை சந்தித்து மகஜரை வழங்கியது சிறப்புக்குரியதாய் அமைந்ததாகவும் இது குறித்து ஆய்வை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்ததாகவும் அருட்செல்வம் கூறினார்.
அதோடு, அடுத்தாண்டு மே மாதத்தில் குறைந்தப்பட்ச அடிப்படை சம்பள உயர்வு குறித்து அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சண்முகம் கூறி யுள்ளார். இந்த மகஜரை தொடர்ந்து கூடிய விரைவில் தேசிய சம்பள ஆலோசனை மன்றத்தின் தொழில்நுட்ப பிரிவுடன் சந்திப்பு நடத்தப்படும் என அருட்செல்வம் சொன்னார்.
Read More: Malaysia Nanban News Paper on 30.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்