(பார்த்திபன் நாகராஜன்)
கோலாலம்பூர்,
உடல் நலக்குறைவால் பாதிக் கப்பட்ட மனைவி, மகளுடன் கால்களை இழந்த பிரபாகரன் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்.ஸ்தாப்பாக் பிபிஆர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் (வயது 44) டாக்சி ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். இவருக்கு 4 பிள்ளைகள்.இதில் மூத்த மகள் வைதீஸ்வரி (வயது 20) மூன்று வயதில் இருந்து உடல், மன வளர்ச்சி யின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வளவு பிரச்சினை வந்தாலும் இப்பிள்ளையை நாமே பாதுகாப்போம் என முடிவு செய்து பிரபாகரன் வைதீஸ்வரிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து வந்துள்ளார்.இவரின் மனைவி நவமணி அண்மைய காலமாக தைராயிடு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களை காக்க வேண்டிய சூழ்நிலையில் சர்க்கரை நோய் காரணமாக பிரபாகரனின் ஒரு கால் துண்டிக்கப்பட்டது. கால் துண்டிக்கப்பட்ட அடுத்த ஓராண்டில் இன்னொரு காலையும் துண்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இப்படி துன்பத்திற்கு மேல் துன்பத்தை சந்தித்த பிரபாகரன் உதவிகள் கிடைக்கும் என தேடித் சென்ற இடங்களில் எல்லாம் ஏமாற்றமே கிடைத்துள்ளது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக் காமல், கிடைத்த உதவிகளை பெற்றுக் கொண்டு வீடு திரும்பிய பிரபாகரன் வேதனை தாங்க முடியாமல் சமூக வலைத் தளங் களில் தனது துயரங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
குறிப்பாக கால்களை இழந்தாலும் பரவாயில்லை. செயற்கை கால்களை பொருத்தி என் குடும்பத்தை காப்பாற்றி விடுவேன் என்று பிரபாகரன் அப்பதிவேற்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.பிரபாகரன் எதிர்நோக்கி வரும் சிரமங்களுக்கு உத வும் வகையில் ஷாடோபேக்ஸ் மோட் டார் கிளப்பினர், மாசல் ரைடர்ஸ், அதிவேக மோட்டார் சைக்கிளோட்டிகள் ஆகியோர் 5,310 வெள்ளியை நன் கொடையாக கொடுத்து உதவி செய்தனர்.
ஷாடோபேக்ஸ் கிளப்பின் தலைவர் டத்தோ ஆனந்த், செயலாளர் குமார், ஜோன், நெல்சன், சேது ஆகியோர் பிர பாகரனை சந்தித்து நன்கொடையை வழங்கினர். பேரங்காடியில் வேலை செய்து வரும் மனைவி நவமணி யின் வருமானத்தில் தான் பிரபாகரன் குடும்ப செலவுகளை ஈடுகட்டி வருகிறார். இருந்த போதிலும் வீட்டுக்கான வாடகை கூட ஒரு வருடத்திற்கு செலுத்தவில்லை.
ஆகவே சிரமத்தில் வாழும் பிரபாகரனுக்கு உதவ பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று டத்தோ ஆனந்த் கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு பிரபாகரன் 017-2188739.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்