பெட்டாலிங்ஜெயா,
இந்தோனேசியாவில் எரிமலை குமுறத் தொடங்கியதைத் தொடர்ந்து பாலித் தீவிற்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பாலியில் பயணிகள் பலர் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். விடுமுறையைக் கழிப்பதற்காக அந்த உல்லாசத் தீவுக்கு சென்ற சுமார் 59 ஆயிரம் பேர் திரும்ப முடி யாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அத்தீவுக்கு செல்லும், திரும்பும் 445 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அருகில் உள்ள வீடுகள் பெரும் சேதத்திற்குள்ளாகின. எரிமலையிலிருந்து வெளியேறும் கருந்துகள்கள், விமானத்தின் இயந்திரத்திற்கு பெரும் பாதிப்பை உண்டு பண்ணக்கூடி யவை என்பதால் விமானங்கள் பாலித் தீவுக்கு செல்ல முற்றாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஏர் ஆசியா, மலேசியா ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்), மலிண்டோ ஏர் ஆகிய நிறுவனங் கள் பாலிக்கு செல்லும், அங் கிருந்து புறப்படும் அனைத்து விமான பய ணங்களையும் அடுத்த அறிவிப்பு வரை ரத்து செய்துள்ளன. மவுண்ட் அகோங் எரிமலை வெடிக்க தொடங்கி இருப்பதன் தொடர்பில் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து இருக்கும் ஆலோச னைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
Read More: Malysia nanban News Paper on 29.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்