பொதுமக்களுக்கு வழங்கப் படும் சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில், பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தின் பிரிவு 299-இன் கீழ் தேசியப் பதிவு இலாகாவிற்கு புதிய அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன. இச்சட்டம் 1957-இல் முதல் முறையாக நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
பிரிவு 299-இன் கீழ் செய்யப்பட்டுள்ள முக்கியமான மாற்றங்களில்:
* புதிதாகப் பிறந்த சிசுக்களின் பதிவை எளிதாக்குவது;
* பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை தளர்த்துவது;
* ஒருவரின் உடலை கண்டுபிடிக்க இயலாத பட்சத்தில் அனுமானிக்கப்பட்ட இறப்புச் சான்றிதழை பெறுவது ஆகியன அவற்றுள் அடங்கும்.
இந்த மூன்று அம்சங்களும் மிகவும் ஆழமாக பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. இச்சட்டம் அமலாக்கம் செய்யப்பட்ட நாள் முதல் இது திருத்தப்படவே இல்லை என்பதை தேசியப் பதிவு இலாகா சுட்டிக்காட்டியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் இனி பிறப்பு, இறப்புகளை தீபகற்ப மலேசியாவில் உள்ள எந்த பதிவு இலாகாவிலும் பதிவு செய்ய முடியும். முந்தைய சட்டத்தின் கீழ், பிறப்பு, இறப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள பதிவு இலாகாவில்தான் மக்கள் பதிவு செய்ய முடியும் என்ற கட்டாயம் இருந்தது.
புதிதாகப் பிறந்த தங்கள் குழந்தைகளை பதிவு செய்வதற்கு பெற்றோர்களுக்கு இதற்கு முன்பு 14 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அந்த 14 நாட்களுக்குப் பிறகு அது காலதாமதமான பதிவாகக் கருதப்படும். எனினும், புதிய சட்டத்தின் கீழ் பெற்றோர்களுக்கு 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது.
Read More: Malaysia Nanban News paper on 28.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்