கோலாலம்பூர்,
ஐ-கார்டு இருந்தால் கூட அந்நியத் தொழிலாளர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார்கள் என்று தலைமைக் கணக்காய்வாளரின் 2016 ஆம் ஆண்டுக்கான 2ஆவது அறிக்கை கூறுகிறது.அந்நியத் தொழிலாளர் களுக்கான ஐ-கார்டு அடையாள ஆவணத் திட்டம் தோல்வி கண்டுள்ளது. ஏனெனில் இந்த ஆவணம், அதிகாரப்பூர்வ அடையாள ஆவணமாக அமலாக்க அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாமல் இருந்து வருவது தான் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.
இதனை அமலாக்க அதிகாரிகள் அங்கீகரிக்காமல் இருப்பதால் ஐ-கார்டு வைத்திருந்தாலும் அந்நியத் தொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படு கின்ற னர். போலீசார் இந்த ஐ-கார்டு ஆவணத்தின் உண்மைத் தன்மையை ஆராய்வதில் சிக்கலை எதிர்நோக்குவதே இதற்குக் காரணம் என்று அது விளக்கியது. ஐ-கார்டு அதிகாரப் பூர்வமான ஆவணமாக அங்கீகரிக்கப்படாததால் அந்நியத் தொழிலாளர்கள் அதிகாரிகளால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று 134 முதலாளிமார்களில் 84 பேர் கண்டறிந்துள்ளனர் என்று இந்த அறிக்கை தெரிவித்தது.
Read More: Malaysia Nanban News Paper on 28.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்