கோலாலம்பூர்
மலேசிய புத்ரா பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றவரான யோகேஸ்வரன் தமிழ்ச்செல்வம், 1995 ஆம் ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், மலி ண்டோ, தற்போது ஏர் ஆசியா என வான் போக்குவரத்துத் துறையில் தன்னை இணைத்துக் கொண்டவர். தற்போது விமானிகளுக்கான ஏ330-200 மற்றும் பி737-800 முதலிய விமானங்களின் சிமுலேட்டர் பொறியியல் பயிற்சிகளை வழங்கு பவராக பணியாற்றி வருகிறார். அதேநேரத்தில் பகுதி நேர மாணவராக ஆசியா இ பல் கலைக்கழகத்தில் நிர்வாகத் துறையில் 2 ஆண்டு காலம் பயின்று மிகச்சிறந்த மதிப் பெண்களை பெற்றுள்ளார்.
தனது சாதனைக்கான அடைவு நிலையை அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக் கழகத்தில் கல்வி நிர்வாகத்தில் கல்வி பயின்று வருகிறார். கல்வி முறையில் ஆக்கப்பூர்வமான ஆளுமை என்ற தலைப்பில் ஓர் ஆய்வையும் மேற்கொண்டு வரும் யோகேஸ்வரன், தனது ஆய்வுப்பணிகளில் ஒரு பகுதி யாக தமிழ்ப்பள்ளி மாணவர்க ளுக்கு நல்லதொரு தன் முனைப்பு உரைகளையும் நிகழ்த்தி வருகிறார்.
புகைப்படக்கலையையும் பயின்று வரும் யோகேஸ்வரன் தனது பயணத்தின் ஒரு பகுதியாக நூல்களை எழுதுவதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். வான் போக்குவரத்து துறையில் தாம் பெற்ற அனுபவத்தை மையமாக கொண்டு காதல் என்பது வானில் பறக்கும் போது" எனும் நூலையும் யோகேஸ்வரன் எழு தியுள்ளார்.
சொந்தமாக தன் முனைப்பு மேற்கோள்களை கொண்ட ஒரு தன்முனைப்பு நூலையும் எழுதியுள்ளார். தற்போது ஒன்பது மாதங்களில் அதிசயம்" எனும் ஒரு வித்தியாசமான நூலை எழுதியிருக்கிறார். மகளிரின் ஆளுமை, பொறுப் புணர்வு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட நிலையில் அவர்களுக்கு இருக்கக்கூ டிய சிறப்பு குண இயல்புகளையும் அவர்க ளின் தனித்துவமான ஆற்றலை யும் இந்நூல் நன்கு விளக்குகிறது.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்